Posts

Showing posts from February, 2022

6. கற்றது ஒழுகு (சிறுகதை)

Image
  6.கற்றது ஒழுகு                          -ஜூனியர் தேஜ் 09.04.2000 தினமணி கதிர்     “ சா யாவனம் ...! சாயாவனம் ...! , உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு ...! ” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது . இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தி ற்குத் திருமணம் ; நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள் ; சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள் . வாடகைப் பந்தல் முனுசாமி , “ நாளை காலைல வந்து பந்த ; g போட்டுடறேன் ...! ” என்று சொல்லிச் சென்றுவிட்டான் . நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும் . இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார் ; பெஞ்சு , பந்திப்பாய் , பெட்ரோமாக்ஸ் விளக்கு எல்லாம் ஆர்டர் செய்த இடத்தில் ஒரு எட்டு ஞாபகப்படுத்திவிட்டு வந்துவிட்டான் சாயாவனம் ; புரோகிதரிடம் சொல்லிவிட்டு அப்போதுதான் வந்தான் . இன்னும் ஒரு வேலைதான் பாக்கி . டவுனுக்குப் போய் டியூப் லைட் , சீரியல் செட் , ஸ்பீக்கர் செட் இதுகளுக்குச் சொல்லிவிட்டு வரவேண்டும் . ய

5. பூமி இழந்திடேல் (சிறுகதை)

Image
5. பூமி இழந்திடேல்                     -ஜூனியர் தேஜ் (17.10.1999 கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை) தொ ழிலதிபர் சோப்ரா இந்த ச் சமயத்தில் இப்படி யொருச் சிக்கலை எதிர்பார்க்க வேயி ல்லை . அதிநவீன த் தொழில்நுட்பத்துடன் கூடிய ச் சாயத்தொழிற்சாலை த் தொடங்க ‘ லொகேஷன் ’ தேடிய சோப்ராவுக்கு , அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று . கிராம முக் கி யஸ்தர்களை அணுகி , நோக்கம் விளக் கி, நிலம் கேட்டபோது , ஊர் கூடி முடிவு செய்து , பலபேருக்கு வேலைவாய்ப்பைத் தரும் பெரிய தொழிற்சாலை த் தொடங்குவதை வரவேற்று , நியாயமான விலையில் , நிலம் தர முன்வந்தனர் . தேவைக்குமேல் ஒரு பங்கு அதிகமாகவே நிலங்களை வாங்கி வளைத்துப்போட்டு , ஆறு மாதங்களுக்கும் மேல் ஆ கி விட்டது . மொ த்த நில ங்களை யும் ‘ சர்வே ’ செய்து , அயல் நாட்டுப் பொறியாளர்களையும் வரவழைத்து க் கம்பெனி நிர்மா ணி க்கப் ‘ பிளான் ’ போடப்பட்டு முறைப்படி ‘ அப்ரூவல் ’ வாங்கியாகிவிட்டது . இன்னும் இரண்டு நாட்களில் அடிக்கல் நாட்டு விழா . ஆயத்தப் பணிகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்