Posts

Showing posts from January, 2023

105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசக

Image
105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசகர்|   My Vikatan விகடன்  28.01. 2023 சர்வதேச டேட்டா ப்ரைவஸி   தினம்  (International Data Privacy Day) ஒவ்வொரு ஆண்டும்   ஜனவரி 28  அன்று அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் தனியுரிமையை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நாளின் பிரதான நோக்கமாகும் .   நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி . மொபைல் இன்றி இல்லை உலகு என்பது புதுமொழி .   கேஜி முதல் பிஜி படிப்பு வரை ஆன்லைன் கற்றல் கற்பித்தல் மூலம் பிரசித்தமானது கொரோனா கொடுத்த கொடை. அது மட்டுமா? ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் திட்டமும்தான். பெட்டிக் கடை முதல் ஐ டி கம்பெனி வரை ஆன்லைன் ...! ஆன்லைன் ...! ஆன்லைன் .. ...! டிமாண்ட் அதிகமாகி விட்டதால், சில சமூக விரோத சக்திகள் மனிதர்களின் அவசரத்தையும், ஆர்வத்தையும், இச்சைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஸ்டார் ஓட்டல்களிலும் , லாட்ஜ்களிலும் காட்டேஜ்களிலும் மிளகு சைஸ் , துவரை சைஸ் காமிராக்கள் வைத்து அந்தரங்கத்தை வெளிப்படையாக்குவதை திரைப்படங்களிலும் , சீரியல்களில
Image
  104. குடியரசு நாள் - ஒரு பார்வை   ( கட்டுரை ) ஜூனியர் தேஜ் விகடன் (26.01.23)      ரா ஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , ராஜ கம்பீர , ராஜ குல திலக , ராஜ வைராக்ய , மா மன்னர் , பெருங்கோ ….. இது போன்ற பட்டங்களை சுதந்திர இந்தியாவில் இன்று நாம் கேட்க முடிவதில்லையல்லவா . காரணம் என்ன ? உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் ஏதோ ஓர் காலகட்டத்தில் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலங்களே ஆகும் . மன்னர்கள் எனப்படும் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள் , கோப தாபங்கள் , இவை அனைத்தும் ஒரு நாட்டை ஆள்வதற்கு இடையூராக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ‘ மக்களே மக்களை ஆண்டு கொள்வது என்பது போன்ற ஒரு அமைப்பு கிரேக்க நாட்டிலும் , அதைச் சுற்றி இருக்கக் கூடிய பல நாடுகளிலும் அமலுக்கு வந்தது . இதைத்தான் ‘ Democracy , A system in which the government of a country is elected by the people. என்று கூறுகிறோம் . எழுதி வைக்கப்பட்ட   வரலாற்றுச் சின்னங்களின் ஆதார அடிப்படையில் நம் இந்தியா ஏறத்தாழ 3000 வருடங்களாகத் தொடர்ந்துப் பல மன்னர்களாலும் , பேரரசர்களாலும் ஆளப்பட்ட ஒரு நாடாகவே இருந்ததை நாம் நன்கு அறி