Posts

Showing posts from September, 2022

83. சரஸ்வதி பூஜை (சிறுகதை)

Image
  83. சரஸ்வதி பூஜை ( சிறுகதை )                         - ஜூனியர் தேஜ் ( 30 - 09 -2022) ஆனந்த விகடன்        ‘ ஷெ ட்யூல்ப் படி ரயில் போனாலே மதியம் ஒண்ணரை மணி ஆயிடும் வீடு போய்ச் சேர ; அதுக்கப்பறம் குளிச்சி ரெடியாகி சரஸ்வதி பூஜை முடிக்கணும் ; நேத்தும் லோலோன்னு அலைச்சல் ; புது இடம்ங்கறதால சரியாத் தூக்கமுமில்லை ; ‘ பர்த் ’ ஏதாவது கிடைச்சா சௌகரியமா இருக்கும் ’. கொஞ்சம் உடம்பைச் சாய்க்கலாம் . விஸ்ராந்தி எடுத்கலாம் .       என்றெல்லாம் நினைத்தபடி ‘ பி ஒன் ’ கோச் நோக்கிச் சென்றாள் மிஸ் ரேவதி. -********- ‘ அப்பாவே காலா காலத்தில் பூஜையை முடித்துவிடலாம் ; பிடிவாதமாக “ நீ வந்ததும்தான் பூஜை ...” என்கிறார் ; வயது ஆக ஆக பக்குவம் வரும் என்பார்கள் ; ‘ எரிக் எரிக்ஸன் ’ சொல்றதைப் போல சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய வயசு அப்பாவுக்கு ; ஞானம் வரவேண்டிய வயசு ; ஆனால் அப்பாவுக்கோ பிடிவாதம்தான் அதிகமாறது …’ ‘ பெற்ற மகள்மீது பாசத்தைக் கொட்டுவது என்பது இதுதானோ ...?’ “ இதுதான் யதார்த்த நிலையோ ...?” ‘ சுய அனுபவமில்லாததால் அப்பாவின் செயலை விமர்சிக்கிறோமோ ...?’ இப்படியெ

82. ஆனந்தி (சிறுகதை)

Image
82. ஆனந்தி (சிறுகதை)                                       - ஜூனியர் தேஜ் (27 - 09 -2022) ஆனந்த விகடன்     " மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா ?"       " ஆனந்தி , இது ஓகேங்களா ?" " பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி ?" " மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்..." " அது ரொம்ப சென்சிடிவ் ஆன ஏரியா.   ஆனந்திய அனுப்புங்க சக்சஸ்ஃபல்லா எல்லாம் முடிச்சுகிட்டு வருவாங்க.."   எதுவாக இருந்தாலும் தலைமை எடிட்டர் ஆனந்தியை அழைத்துத்தான் எதையும் சொல்லுவார்.    ஆனந்தி இன்டர்வியூ என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் யோசனை தான். சிஎம் முதல் பிஎம் வரை யாராக இருந்தாலும் மிகவும் யோசித்து பதில் சொல்லுவார்கள். ' ஃபிங்கர் டிப்ஸி ' ல் இருக்கும் ' பாயிண்ட்ஸ் '. அழகான நுனி நாக்கு ஆங்கிலம்.           தெளிவான தமிழ் உச்சரிப்பு. ஒற்றுப் பிழைகளற்ற தமிழ் ரிப்போர்டிங்.           ஆனந்தியின் ரிப்போர்ட்டிங் மிக வித்தியாசமாக இருக்கும். ஒரு இலக்கியம் படிப்பதைப் போல இருக்கும்.           அழகான நடையில் அவள் எழுதும் ரிப்போர்ட்டை படிக்க ஒரு