Posts

Showing posts from April, 2023

116 . மூன்றாம் விதி (சிறுகதை)

Image
  116. மூன்றாம் விதி - ஜூனியர்தேஜ் அனிச்சம் - மே - 2023  “ அ டடா... சுத்தமா மறந்துட்டேன்... ? ” நெற்றியில் உள்ளங்கையால் தட்டிக் கொண்டார் அப்பா முருகனின் தந்தை சிவா. முருகம் முகம் சுருங்கியது. சிவா குற்ற உணர்வில் மருகினார். வேலை முடித்துக் கிளம்பும் வரைக்கும் அதை இழைத்துப் போடு, இதற்கு ஸ்க்ரூ போட்டு முடுக்கு. கதவுக்குப் படிமானம் பாரு, ஹூக் டைட்டா இருக்கு பாரு லூஸ் பண்ணிவிடு, என்று ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருந்ததில் மகன் அவசியமாகத் தேவை என்று சொன்ன ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கி வர சுத்தமாக மறந்து விட்டார் சிவா. “அப்பா...! ” மகனின் அழைப்பில் ஒரு வித ஏளனம் இருந்தது. “ம்...! ” என்றார்; குனிந்த தலை நிமிராமல். “சொல்றேனேனு வருத்தப்படாதீங்கப்பா... குடும்பத்தலைவர்னு சொல்லிக்கிட்டாப் போதாது. அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கணும்...! ” சுருக் ’ கெனச் சொல்லிவிட்டான் முருகன். “டேய்! பெத்த தகப்பனை இப்படி மரியாதையில்லாமப் பேச உனக்கு என்ன தெகிரியம்..? ” கேட்டுக்கொண்டே வந்த மனைவியை அடக்கினார் சிவா. “வாங்கி வராதது என் தப்புதானே. உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சித்தான் ஆவணும். தப்புப்பண்ணிட்டா தண்டணை அனுபவ

119. செல்(ல) வேண்டாம் (ஒ ப க)

Image
  119. செல்(ல) வேண்டாம் (ஒ ப க) - ஜூனியர் தேஜ் ( மே 2023 கதிர்ஸ்) “ அ ம்மா...! ” “வா கருணாகரா.. மருமக, குழந்தைங்க எல்லாரும் சௌக்கியமா..? ” “எல்லாரும் நல்லாருக்காங்கம்மா... அடுத்த வாரம் பசங்களுக்கு லீவு. அழைச்சிட்டு வரேம்மா. ” கருணாகரனின் விரல் செல்போனில் எண்ணை அழுத்தியது. “ ம். ” என்ற அம்மாவிடம் செல் போனைத் தந்தான் கருணாகரன். ‘வீடியோ காலி ’ ல் வந்த பேரன் பேத்திகளோடும், மருமகளோடும் சந்தோஷமாகப் பேசினாள்  அம்மா. அடுத்தடுத்து, , தனது மூத்த சகோதரன், இளைய சகோதரன் இவர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து, அனைவரோடும் வீடியோ கால் பேசவைத்தான். மனம், மொழி, மெய்யெல்லாம் அப்படியொரு மகிழ்ச்சி, அம்மாவுக்கு, வாரமொரு முறையோ பத்து நாளுக்கொரு முறையோ, தன் மூன்று மகன்களில் ஒருவர், தனியாகவோ, குடும்பத்தோடோ, சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல், தனியாக இருக்கும் அம்மாவைப் பார்க்க வருவார்கள். யார் வந்தாலும் , வீடியோ கால் போட்டு அனைவரிடமும் அம்மாவைப் பேசவைத்து மகிழ்வார்கள். நாள்-கிழமையென்றால் மூன்று அண்ணன் தம்பிகளும், குழந்தைக் குட்டிகளோடு கூடிவிடுவார்கள். வீடே மகிழ்ச்சியில் மிதக்கும். அ ப்பாவின் முதல் நினைவு நாளன்று அனைவர

118. பயணம் (ஒபக)

Image
  118. பயணம் (ஒபக)                                       - ஜூனியர் தேஜ் ( மே 2023 கதிர்ஸ்)  “ கா தல் கீதலெல்லாம் சரிவராது. ” கோபமாகக் கத்தினார் நித்யானந்தன். “எனக்கு ரத்தினத்தைப் பிடிக்கலை; பிடிக்கலை; பிடிக்கலை...! ” பதிலுக்குக் கோபமாகக் கத்தினாள் கௌசிகா. “உன் மாமன் மகன் ரத்தினத்துக்கும் உனக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். மனசை தயார் பண்ணிக்க.. ” நித்யானந்தன் கராறாகச் சொன்னார். தன் சகோதரனின் ஒரே மகன்தான் ரத்தினம் என்றாலும், பிடிக்கவில்லை என்று மகள் சொன்ன பிறகு இந்த சம்பந்தத்தில் விருப்பமேயில்லை கொளசிகாவின் தாய்க்கு. ஆண்டவன் விட்ட வழி என்று அமைதியாக இருந்தாள். பேருக்குச் சாப்பிட்டுவிட்டு, சென்னைக்குச் செல்ல ஆயத்தமானார் நித்யானந்தம். *****- “எ ன்னங்க.. ” “ம்.. ” “நம்ம தலையாரி மகன் ராமு, கார்ல ஒண்டியாத்தான்  போறானான். இப்பதான் கேள்விப்பட்டேன். நீங்க அவன் கூட வசதியாப் போயிடுங்களேன். ” “சீச்சீ.. வாயக் கழுவு. அவனை எனக்கு அறவே பிடிக்காது. அவனோட, ரெண்டு மணி நேரம் பயணம் பண்ணி சென்னைக்குப் போகச் சொல்றியே அறிவுருக்கா உனக்கு... ” “ பிடிக்காதவங்களோட ரெண்டு மணி நேரம் பயணம் செய்யவே யோசிக்கற

117. ஐந்து ரூபாய் மிச்சம் (ஒரு பக்கக் கதை)

Image
  117. ஐந்து ரூபாய் மிச்சம்                                ஜூனியர் தேஜ் ( மே 2023 கதிர்ஸ்)             எ க்ஸ்பிரஸ் ஏழாவது பிளாட்பாரத்தில் நின்றது . முதுகுப் பை தவிர   இரண்டு கைகளிலும்   சுமைகளோடு இறங்கினார் சங்கரன் . அவருக்கு வயது 60. " தூக்கியாரட்டுங்களா ? ”   கேட்டார் போர்டர் . “………………………….. ” யோசித்தார் சங்கரன் . “50 ரூவா குடுங்க போதும் " என்றார் . ‘ நம் சுமைகளை நாமேதான் சுமக்க வேண்டும் ...! ’   என்ற கொள்கையால் சங்கரன் வயதுக்கு மீறிய சுமையைச் சுமந்து கொண்டு நடந்து, பிளாட்பாரத்தின் மறுகோடியில்     படியேறி, முதல்   படியிறங்கி, முதல் நடைமேடையில் ரயில்நிலைய முகப்பில் வந்து நின்றார் . ' இன்னும் அரை மணி நேரத்தில் டவுன் பஸ் இருக்கிறது . மகன் இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவான் .' வீட்டுக்குப் போகும் நேரத்தை மனசால் கணக்கிட்டார் . "மு தல் பிளாட்பாரத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும் ..."  என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ; "வந்து கொண்டிருக்கிறது..." என்ற அ

115. அம்மா வீடு

Image
  115.  அம்மா வீடு                                     - ஜூனியர் தேஜ் ( இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை.   “ அ ம்மா வீட்டுக்குப் போ ...!” ருத்ரதாண்டவமாடி , வாய்க்கு வந்தபடிக் கூச்சலிட்ட ஆனந்தன் , தன் மனைவியின் மீது முடிவாக வீசியச் சொற்றொடர் . அமிலம் தோய்த்த ஆனந்தனின் வார்த்தைகள்   அகிலாவின் செவியை தீய்த்துக் கொண்டே உள்ளே இறங்கின . அதிர்ச்சியில் உரைந்தாள் அகிலா . *****- கு டும்பத்திற்குக் குடும்பம் , பல்வேறுப் பரிமாணங்களில் வித்தியாசப்படும் கொள்வினைகளையும் , கொடுப்பினைகளையும் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்தவளில்லை அகிலா ; எவரோடும் , எதனோடும் தன் வாழ்வை ஒப்பிட்டவளில்லை ; தன் கணவன் , தன் குடும்ப வளர்ச்சி மட்டுமேக் குறிக்கோளாய் , யக்ஞம் போன்றுக் குடித்தனம் நடத்துகிற கர்ம யோகி அவள் ;   ‘ என்னைப் போய் ‘ அம்மா வீட்டுக்குப் போ ’ ன்னு சொல்லிட்டாரே ...!’; ஆற்றாமையில் குமைந்தாள் . துக்கம் துக்கமாக வந்தது ; ‘ ச்ச்சே ...!’ மனசு விட்டுப்போனது ; விரக்திவசப்பட்டாள் ; விசனப்பட்டாள் . ***** - எ ல்லா தம்பதியர்களையும் போல எதனையோ முறை