Posts

Showing posts from April, 2022

67. சீஸன் (ஒரு பக்கக் கதை)

Image
                            67. சீஸன்                                       - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் (1-15-மே- 2022)       “த லை பாரமா இருக்கு டாக்டர்..! ” டாக்டர் நரசிம்மன் 3 நாட்களுக்கு மருந்து மாத்திரை எழுதித் கொடுத்தார். “தலை பாரம், கோல்டு, ரன்னிங் நோஸ்... என நிறைய பேஷண்ட்டுகள் வந்தார்கள். எல்லா பேஷண்டுகளுக்கும் 3 நாளைக்கு ‘ஆன்டிபயாடி ’ க்கும் ‘சிரப் ’ பும் எழுதினார். இந்த சீசன்ல இது எல்லாருக்கும் வரும்தான். சரியாயிரும் போங்க. ” என்று ஆறுதலும் கூறினார் டாக்டர் நரசிம்மன்.   க் ளீனிக்கை பூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.  ‘ஹச்...! ’ என்ற தும்மலுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் நரசிம்மன் உடை மாற்றிக்கொண்டு வந்தார். “நரசிம்மா.. இங்கே வந்து உட்காரு ’’ பாட்டி அழைத்ததும் சென்றார். சொன்ன இடத்தில் உட்கார்ந்தார் நரசிம்மன் நொச்சி, ஆடாதொடை, தும்பை, துளசி, வெற்றிலை, தூதுவளை, என பல்வேறு மூலிகைகளைப் போட்டு பாட்டி தயாராக வைத்திருந்த கொதிக்கம் நீரில் போர்வையை போர்த்திக்கொண்டு ஆவிபிடித்தபின், அம்மா கொடுத்த கஷாயத்தையும் குடித்துவிட்டு, ஓய்வெடுத்

66. கோச் (ஒரு பக்கக் கதை)

Image
66. கோச்                     - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் – (1-15 மே 2022)       'ஷா ர்ட்ஸுடன்' தான் செய்யும்   உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று   கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள்.   ‘ச்சீ   !   பொறுக்கிப் பயலே, என் புருஷனிடம் சொல்லி உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு..!'   கருவிக் கொண்டே ஹரிணி கீழே இறங்கி வந்தபோது காலிங்பெல் ஒலித்தது .   ‘யாராக இருக்கம் ’ யோசித்தபடியே திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி.     மொட்டை மாடியில் பார்த்த அதே முகம், இப்போது எதிரில், மிக அருகில்.   "மேடம்.. என் பெயர் ஹரன். எதிர் வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம் ஆகுது."     " ....." பதில் பேசாமல் 'சுள்' என முகத்தை வைத்துக்கொண்டு, மௌனம் காத்தாள் ஹரிணி.   "மேடம்...! ஒரு வாரமா உங்க உடற்பயிற்சியை பார்த்துப் பார்த்து , தானும் செய்யணும்னு ஆசை படுறா என் மனைவி. அவளுக்கு நீங்க முறையா உடற்பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுத் தர முடியுமா ?.." ஹரன் இயல்பாகக் கேட்க, பின்னாலிருந்த ஹரிணி முன்னே வந்து கைகூப்பிளாள்.   'உ டற்பயி

65. விவசாயி (ஒரு பக்கக் கதை)

Image
விவசாயி (ஒபக)                                       - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் – (1-15 மே 2022)       வை த்திலிங்கம் ஒரு சிறு விவசாயி . கடன் , கைமாற்று , என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது . " முன்னேரத்துலயே வந்து வேலையை முடிச்சிக் கொடுங்களேன் புண்ணியமாப் போவும் ..?" அறுவடை மெஷின் அன்னங்காரிடம் கெஞ்சுவது போலக் கேட்டார் . " சொல்றீங்க ! காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துடுறேன் ...  ‘ மேலே சேர்த்துப் போட்டு கொடுங்க …. ய்யா ! "  தலை சொரிந்தார் அன்னங்கார் . ச ரியாக ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை முடிந்து நெல்லும் வைக்கோலும் பிரிந்துவிட்டது . இரண்டு மணி   நேரத்துக்கான கூலியை பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டார் அன்னங்கார் . மண்டையைப் பிளக்கும் வெயில் . களத்தில் நெல்லைத் திராவிக் காய வைத்துவிட்டு .., ஒரு எட்டு  ‘ டி . பி . சி ’ வரை ஓட்டமும் நடையுமாகச் சென்றார் . முன் பதிவை அனுசரித்து   3 மணிக்கு நேரம் ஒதுக்கினார்கள் . மழையில் கிழையில் அடி படாத கண்டுமுதல் .  களத்தில் சுக்காய்  க

64. உயர்ந்த மனிதர்கள் (சிறுகதை)

Image
    64. உயர்ந்த மனிதர்கள்                                       - ஜூனியர் தேஜ்... ஆனந்த விகடன் 28.04.2022 “ அ ப்பாவோடு கோவிலுக்குப் போய்வந்த கையோடு பாடப்  புத்தகங்களை வைத்துக்கொண்டு போர்ட்டிகோவில் உட்கார்ந்தான் மகேஷ்... ” அவனுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை. ‘கோவிலில் , அப்பாவிடம் கோவில் குருக்கள் சொன்னதே மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ’ என்பதைச் சிந்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன். “கு ருக்களண்ணா...! ” “வாங்கோ...! வாங்கோ...! ஏதும் விசேஷமா...! ” “ம்...! வர்ற வாரம் எனக்கு ஜன்ம நக்‌ஷத்ரம் வருது. ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு அபிஷேகம் பண்ணலாம்னு...! ” “பேஷா...! பண்ணிட்டாப் போறது...! ” சொல்லிக்கொண்டே உள்ளே எழுந்து சென்றார். கர்பக் கிருஹத்தில் கற்பூர ஆரத்தி காட்டினார். அப்பா பத்து ரூபாய் நாணயம் ஒன்றை மகேஷ் கையில் கொடுத்து தட்டில் போடச் சொன்னார். சிப்பத்திலிருது கிள்ளி எடுத்து . அப்பாவின் வலது கையில் திருநீற்றைப் போட்டார். மகேஷ் ’ ன் நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிவிட்டார். மீண்டும் உள்ளே போனார். ஒரு தேங்காய் மூடியை எடுத்து அதற்குள், ந