Posts

Showing posts from August, 2023

134. தலைமுறைகள் (சிறுகதை)

Image
  134. தலைமுறைகள் (சிறுகதை) நற்றிணை 184 ஒரு   மகள்   உடையேன்   மன்னே   அவளும் செரு   மிகு   மொய்ம்பின்   கூர்வேற்   காளையடு பெரு   மலை   அருஞ்   சுரம்   நெருநல்   சென்றனள் இனியே   தாங்கு   நின்   அவலம்   என்றிர்   அது   மற்று யாங்ஙனம்   ஒல்லுமோ   அறிவுடையீரே உள்ளின்   உள்ளம்   வேமே   உண்கண் மணி   வாழ்   பாவை   நடை   கற்றன்ன   என் அணி   இயற்   குறுமகள்   ஆடிய மணி   ஏர்   நொச்சியும்   தெற்றியும்   கண்டே   தலைமுறைகள் ( மனவியல் சிறுகதை )   - ஜூனியர் தேஜ் (கௌரா இலக்கிய மன்றம் 3வது பரிசு) (2023) “ ஃ பிராய்டிஸத்தில் கரைகண்ட சைக்கோ அனலிஸ்ட் டாக்டர் நவீனன் ‘ வளர்ச்சி உளவியல் ’ என்கிற மூலப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார் . “ என்னிடம் பால் மணம் மாறாத 12 பச்சிளம் குழந்தைகளைத் தாருங்கள் , குழந்தைகளின் பின்னணி எதுவானாதாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்புகிறபடி ; உதாரணமாக மருத்துவர் , வக்கீல் , ஆசிரியர் , ஓவியர் , வியாபாரி ஏன் …? ஒரு பிச்சைக்காரனாக , திருடனாகக் கூட உருவாக்கிக் காட்டுகிறேன் .” இப்படிப்பட்டச் சவாலுடன் கூடிய ‘ ஜே பி வாட்ஸனின் ’ கோட்பாடான