Posts

Showing posts from May, 2022

கலியன் மதவு (அத்தியாயம் 7)

Image
கலியன் மதவு (சமூக நாவல்)                                       - ஜூனியர் தேஜ் அத்தியாயம் – 7 ஆனந்த விகடன் 25.05.2022 “ நெ டிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி... லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள , பர்ஸ்ஸுடன் கூடிய , சாயம் போன பச்சை கலர் பெல்ட். கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு... அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு... வயிற்றை அரைகுறையாய் மறைத்தபடி காட்டும் நீல நிற முண்டா பனியன். தினவெடுத்து கரணை கரணையாக உருண்டுத் திரண்டு நிற்கும் புஜங்கள்... வீச்சரிவாளை அழுந்தப் பிடித்திருந்ததால் வலது புஜம் அதிகமாய் திரண்டதுபோல் தெரிந்தது. அடர்ந்து வளர்ந்து வளைந்த முரட்டு மீசைத் துடிக்கக் கண்கள் கோபத்தில் கோவைப்பழமாய்ச் சிவந்திருந்தது . “அந்தப் பய எங்கே போனாலும் விடமாட்டேன். தலையை வெட்டி வீசுவேன்... ” சவால் விட்டபடி நின்ற வீரமுத்துவிடம் நெருங்க முடியாத அளவுக்குக் ‘குப் ’ பென்று சாராய வாடை வீசியது.   ஆ த்திரக்காரனுக்கு புத்தி மட்டு