Posts

Showing posts from November, 2023

136.சிதையா நெஞ்சு கொள்! (சிறுகதை)

Image
  136. சிதையா நெஞ்சு கொள் ! (சிறுகதை)   (தேன் சிட்டு தீபாவளி மலர் 2023) அ ரசுயர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ‘இ ’ பிரிவு வருகைப் பதிவேட்டில் முருகேசன் பெயர் இருக்கிறது. அவனோ ‘ ஐவரின் கரந்துறை வாழ்க்கை ’ ப் போல, மறைந்து மறைந்து வாழ்ந்தான். பள்ளி ஆசிரியர்கள், ‘சர்வ சிட்ச அபியான் ’ என்ற மத்திய அரசின் கல்வித் துறை அலுவலர்கள், கூடப்படிக்கும் மாணவர்கள்..., யார்க்கண்ணில் பட்டாலும் பள்ளிக்கூடத்துக்குக் கொத்திக்கொண்டுப் போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் அறவேக் கசந்தது அவனுக்கு. பகல் முழுதும் வீட்டுக்குள்ளேத், தன் பணிப்பட்டரைக்குள்ளேயேக் கனவுகளோடும், கற்பனைகளோடும் கழித்தான். கொரோனா நேரத்தில், எல்லா மாணவர்களுக்கும் அத்தியாவசியமாகவிருந்த கைப்பேசி, இப்போது முருகேசனுக்கு முதுகெலும்பாய் ஆகிப்போனது. ‘யூ டியூப் ’ என்ற செயலியில் தொழில் கற்றான்; உலகின் பல்வேறு பகுதிகளில், மண் பானைகள், பீங்கான் பானைகள் வனையும் முறைகளைச் சுவாரசியமாகப் பார்த்துக் பார்த்துச் செய்துப் பழகினான்.  ‘நாமும் இதுபோல வித்தியாசமான வடிவங்களில் பானைகளும், பாத்திரங்களும் வனையவேண்டுமென்றத் தீராதத்தாகமும், ஆவலும் அவனுள் கணன்ற

135. நீரடி! (சிறுகதை)

Image
  135. நீரடி!   (சிறுகதை)                        - ஜூனியர் தேஜ் கொலுசு 100வது இதழ் (நவம்பர் 2023)   த ற்காலிகமாக வலி மறந்து, ஜம்பு அன்பாய் ஊட்டிவிட்ட இட்லி ’ களை ருசித்துச் சாப்பிட்டாள் அகிலா. கிண்ணத்திலிருந்தத் தண்ணீரை விரல்களால் நனைத்து உதட்டோரத்தைத் சுத்தம் செய்து கொண்டு, தேங்காய்ப்பூத் துவாலையால் முகத்தையும் விரல்களையும் நன்கு துடைத்துக் கொண்டாள். “என்னங்க...? ” “சொல்லு அகிலா...! ” “நம்ப பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லிடலாம்ங்க. ..! ” - சொல்லும்போதே மூச்சு வாங்கியது, நிறைமாத கர்ப்பிணியான அகிலாவுக்கு. “சாரி அகிலா...! “.................. ” – அகிலா எதுவும் பேசவில்லை - ‘ஜம்பு பிடிவாதக்காரன். ரோஷக்காரன்; காலம்தான் கடந்தகாலத்தின் கசப்பான அனுபங்களையெல்லாம் சரி செய்ய வேண்டும்! ’ - மனதிற்குள் மருகினாள். அ கிலாவின் வலது இடுப்பில் ‘குத்தல்-வலி ’ தொடங்கித் தொடர்ந்துத் தீவிரமாகியது; அந்த வலிதானா என்றுகூட அனுமானிக்கத் தெரியாத, முதலனுபவம் அவளுக்கு ; இரண்டு கைகளையும் மாற்றி மாற்றித் தலையணையில் ஊன்றி நிமிர்ந்தாள்; பக்கவாட்டில் இடுப்பைச் விடைத்து ‘ஸ்ரெட்ச் ’ செய்தாள். படிப்ப