Posts

Showing posts from February, 2024

144. ஈசாக்கின் காதல் – (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை)

Image
144. ஈசாக்கின் காதல் –  (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை) ஜூனியர் தேஜ்  விகடன் 14.02.2024 “அ ய்யா...!” “ம்...!” “காதலர் தின பிரசங்கம் கேட்டு மீடியாவுலேந்து வந்திருக்காங்கய்யா...!” “அப்படியா.. உள்ளே வரச்சொல்..” “சரிங்க அய்யா...! ” என்று சொன்னப் பணியாள், “ஹால்ல உட்காருங்க. இப்ப வந்துருவார்...! ” என்று அமரவைத்துவிட்டு, அவசரமாக வெளியேறி விட்டான். வரவேற்பறையில் அருட்தந்தை ஆல்பர்ட் பல்வேறு நிகழ்வுகளின் பங்குகொண்டபோது எடுக்கப்பட்டு, சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த நிழற்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சோஃபியா. 1517 ல் இறையியல் பேராசியராக இருந்த ஜெர்மன் பாதிரியாரும், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான, மார்டின் லூதர் கிங் அவர்கள் விட்டன்ஸ்பர்க் தேவாலயத்தில் பதிப்பித்த 95 அறிக்கைகளின் வாயிலாகச் சீர்திருத்தமடைந்த லுத்தரன் திருச்சபையின் அங்கத்தினரான பங்குத் தந்தை தேவசகாயகம். அவரின்ஒரே வாரிசான ஆல்பர்ட், தன் ஆற்றல் மிக்க இறையியல் தொண்டால், மகன் தந்தைக்காற்றும் நன்றியை நவின்று கொண்டிருக்கிறார். ’ என்பதை நினைத்தபோது பெருமையாக இருந்தது சோஃபியாவுக்கு. *** மு கத்தைத் துடைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு

143. மீண்ட சொர்க்கம் (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை)

Image
143. மீண்ட சொர்க்கம்                                   ஜூனியர் தேஜ் (11.02.2024 தினகரன் மகளிர் மலர்   ரூபாய்   5000 /- பரிசு பெற்ற  காதலர் தினச் சிறப்புச் சிறுகதை) “ஆ ராயி...!” “என்னாங்க..!” “நாளைக்கு என்னா தேதி தெரியுமா? பிப்ரவரி பதினாலு...” – அமாவாசைக் கிழவரின் கண்களில் காதல் வழிந்தது. “போதுமே...! யாரு காதுலயாவது வுளுவப்போவுது...!” - வெட்கப்பட்டாள் ஆராயி. “வுளுந்தாத்தான் என்னா? பல்லு இருக்கு பக்கடாத் திங்கறோம்...!” “...................” – வெட்கினாள் ஆராயி. “ஒருத்தருக்கொருத்தர் பிரியமா இருக்கறதைத்தான் காதல்னு செல்லிக்கறானுங்க.! ” - இதுதான் ‘காதல் ’ என்கிற சொல்லுக்கு அமாவாசைக் கிழவரின் அகராதியில் காணப்படும் விளக்கம். “எல்லா நாளும் நமக்கு பிரியமான நாளுதான் ஆராயி.  இருந்தாலும்... அதுக்கான நாளா பிப்ரவரி 14 ‘னு வெள்ளைக்காரன் ஒதுக்கி வெச்சதை இங்கேயும் கொண்டாடறானுங்க. நாமும் சிறப்பாக் கொண்டாடிருவோம்..” - என்று வசீகரமான சிரிப்புச் சிரித்தார் அமாவாசை. வெட்கத்தால் நாணிய ஆராயி, சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள். -*****- அ மாவாசைக் கிழவரைப் பார்த்தால், அவருக்கு வயது எழுபது என்று யாரும் ச

142. சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும் (குணசீலத்துக் கதை)

Image
  சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும் (Independent Personality & Dependent Personality ஜூனியர் தேஜ் குணசீலத்துச் சிறுகதை விகடன் - 07.02.2024 ‘தி றத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய்ச் சொல்வதை விடக், கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.   'மரியாதை நிமித்தம், வரவேற்புக்கோ, வழியனுப்பலுக்கோ, ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு, வருவதென்ற நடைமுறைகளையெல்லாம் அறவே விரும்பாதவர் சிவகாமிப்-பாட்டி. அதெல்லாம் நேர விரயம் வரட்டு ஜம்பம், என்பது பாட்டியின் கருத்து. வழக்கம்போல், சிவாகாமிப் பாட்டி, வாசல் திண்ணையில் பைகளை கொண்ட வந்து வைத்தாள். வீதியில் இறங்கினாள். தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கி