Posts

Showing posts from June, 2022

கலியன் மதவு (அத்யாயம் 11)

Image
  கலியன் மதவு (சமூக நாவல்)                                       - ஜூனியர் தேஜ் அத்தியாயம் – 11 ஆனந்த விகடன் 25.06.2022 “ செ கண்ட் ஃபாரத்தில் இரண்டாவது வருஷமும் ஃபெயில் ஆகிவிட்டான் துரைராமன் . பள்ளிக்கூடம் அலர்ஜியாகிவிட்டது அவனுக்கு . “வீட்டோடு கிடக்கேன்...! ” முரண்டு பிடித்தான் . ‘ பருத்தி , புடவையாய்க் காய்த்தாற்போல ’ சந்தோஷித்தார் மாதய்யா . “சரி... ! கூடமாட வயலுக்கு என்னோட வா ,   வெவசயத்தைக் கத்துக்கோ... ” என்றார் . “ நான் நாலாவது ஃபாரம் வரைக்கும் படிச்சேன்... நீ ரெண்டாவது ஃபாரம் போதும்கறே...! ” சமாதானமும் சொன்னார் . இந்த உரையாடலை எதேச்சையாகக் காதில் வாங்கினார் , புழக்கடைப்பக்கமிருந்து வந்த மைத்துனர் சுப்பாமணி , துரையின் மாமா . ‘ சொரேல் ..’ என்றது அவருக்கு . ‘ வளரவிடக்கூடாது .. ! முளையிலேயே கிள்ளி எறியணும் ...’ முடிவு செய்தார் . ‘ சட் ’ டென்று மூக்கை நுழைத்தார் . “ ஸ்கூல் ஃபைனல் வரைக்கும் துரை படிக்கட்டும்... அத்திம்பேர்... உங்க காலம் வேற அவன் காலம் வேற... ” என்றார் . “....................” “ விவசாயம் எங்கே போகப்போறது. இப்போப் படிக்கட்டுமே... !