Posts

176. பெத்த வயிறு (தினமணி கதிர் 29.06.25)

Image
      பெத்த வயிறு        தினமணி கதிர் 29.06.25 "ஏ லேய் ரா......கு......லூ....."  ஆள்காட்டி விரல்கள் மூக்கு முனையின் இருபுறமும் தொட்டிருக்க, கட்டைவிரல்கள் கன்னங்களில் தாங்கியிருக்க, வாய் முன் புனல் போல் கைகளைக் குவித்தபடி, தன் குடிசை வாசலில் இருந்து சத்தமாக தன் மகனை அழைத்தாள் சாவித்திரி. அறிவியல் தொழில் நுட்பங்களின் குறுக்கீடே இல்லாத அந்தப் பின் தங்கிய கிராமத்தில், பத்துப் பனிரெண்டு ஓலைக் குடிசைகளுக்கு அப்பால், வேலியோரமாய் இங்கும் அங்குமாய் கண்களையும் கால்களையும் உலவ விட்டு, பொன்வண்டோ, தட்டானா, தேரையோ, தவளையோ, ஓணானோ, அரணையோ, சாரையோ, சர்ப்பமோ, நாயோ பூனையோ அல்லது வேறு எதையோ பராக்குப் பார்த்தபடி, பொழுது போக்கிக் கொண்டு நின்ற ராகுலின் காதுகளில் அம்மாவின் குரல் இறங்கியது.   "ஊரு ஒலகத்துல, இவன் வயசுப் பயலுவ எப்படியெல்லாம் சூட்டிகையா இருக்கானுங்க, வெட்டிக்கிட்டு வான்னா, கட்டிக்கிட்டு வந்து நிக்கறானுவ; நாம பெத்தது, இப்பிடி ஒரு சுதாரிப்பும் இல்லாம மச மச ன்னு இருக்கானே..!; ம்...! நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான் போல; நாம வாங்கிக்கிட்டு வந்த வ...

175. உறவுப் பாலங்கள் ( காற்று வெளி -ஆடி 2025)

Image
  175. உறவுப் பாலங்கள் உறவுப் பாலங்கள் -                                 ஜூனியர் தேஜ் தே ஜ் வித்யா மந்திர், மெட்ரிக் பள்ளியில், கீழ் நிலை வகுப்பில் படித்து வரும் மகேஷ், உரத்த குரலில், தன்னை மறந்து, “London Bridge is Falling Down…! Falling Down…!! Falling Down…!!!” என்று வெவ்வேறுத் தாள கதியில், குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் ராகம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தான். ‘நைட் ஷிப்ட் ’ டில் வேலை பார்த்துவிட்டு, விடிகாலை ஐந்து மணிக்குதான் வீட்டிற்கு வந்து படுத்த கருணாகரனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. கண் பிட்டுக்கொண்டது. மணலை அள்ளிக் கொட்டியது போல உறுத்தின கண்கள். மிளகாய்த் தூள் கொட்டியது போல எரிச்சல் மூண்டது. கண்களை மீண்டும் மூட முயற்சித்தான். நெற்றி நரம்புகள் ‘வெடுக்... வெடுக்...’ என இழுத்து, கண்களுக்குள் குத்து வலி எடுத்துக் கண்ணீர் பிதுங்கி வெளியேறியது. கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டான். மீண்டும் கண்களை மூடி, தூங்க முயன்றான். ‘London Bridge is ... என்று தொடர்ந்து ரெய்ம் பாடினான் மகன். நேற...