Posts

Showing posts from January, 2024

140. குற்ற உணர்வு (குணசீலத்துக் கதை)

Image
  140. குற்ற உணர்வு (விகடன் 05.01.2024) இரவு மணி 9.00. புத்தாண்டுப் பிறக்க இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது. சீனியர் சப்ளையர் கணேசனுக்கு மனசு சரியில்லை. குற்ற உணர்வில் புழுங்கிக் கொண்டிருந்தான். *** டிசம்பர் 31 - ‘புத்தாண்டு ஈவ்… ’ நகரத்தில் அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழியும் தினங்களில் இது முதன்மையானது. ‘ஆன் லைன் ’ புக்கிங் செய்பவர்கள்…; அழைப்பு - மெசேஜுக்காகஙக காத்திருப்போர்…;   எப்போது அழைப்பார்களென்று ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் குடும்ப உறுப்பினர்கள் ;   நண்பர் குழாம்கள்…!; காதல் ஜோடிகள்…! எல்லோரும், வெறும் வாய்க்கு நேரடியாகவும், செல்போன் மூலமும், அரட்டை மென்றார்கள். *** “வீட்ல, ‘சோறு கொதிக்குது! அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்க ’ ன்னுச் சொன்னாத், தட்டை தூக்க மூஞ்சீல அடிப்பாரே… உங்கப்பா, இங்கே மட்டும் மணிக்கணக்காக் காத்திருக்க முடியுதாமா…? ” - கிடைத்த வாய்ப்பில், ஒரு தாய் தன் குழந்தைகள் முன் கணவனைக் குத்திக் காட்டினாள். “வூட்ல நிம்மதியா தின்னுப்புட்டு, சாவகாசமா, ‘மிட் நைட் மாஸ் ’ காட்டப் போயிருக்கலாம். சோத்துக்கு ‘கவாங்-கவாங் ’ ன்னு காத்துக் கிடக்கணு

140 . பகுத்தறிவு (ஒரு பக்கக் கதை)

Image
140 பகுத்தறிவு                                       - ஜூனியர் தேஜ் ஜனவரி 2024 - கதிர் “ரா குல், நான் ஒரு கால் நடை மருத்துவர்; உங்க அம்மா ஒரு குழந்தை நல மருத்துவர்;  காசு செலவு பண்ணி உன்னை ஃபார்மஸிஸ்ட் கோர்ஸ் படிக்க வெச்சோம்... நீ இப்படி நடந்துக்கலாமா? ” 'எப்போது ராகுல் வருவான்; வந்ததும் எதைச் சொல்ல வேண்டும்;' - என்று நன்கு ஒத்திகைப் பார்த்துவைத்துக் கொண்டு, நேரம் பார்த்துப் பேசும் பெற்றோரின் பேச்சு, தெற்றெனப் புரிந்தது ராகுலுக்கு. *** “ரா குல்...! ” – அம்மா அழைத்தாள். “ம்… ” “நான் நேரிடையா விஷயத்துக்கு வரேன். நாங்க கேள்விப் படறதெல்லாம் உண்மையா? ” “உண்மைதாம்மா..! ” “அப்பா சொன்னதைப் போல, நம்ம ஸ்டேட்டஸ், உன்னோட குவாலிபிகேஷன் இதையெல்லாம் நினைச்சிப்பாத்தியா ராகுல்.. ” “பார்த்தேன்ம்மா..! ” . “உன் முடிவுல மாற்றமே இல்லையா? ” “இல்லைம்மா.. ! நான் ஹாசியைத்தான் கல்யாணம் கட்டிக்குவேன். ” – குரலில் உறுதி இருந்தது. *** “ரா குல். தெருத் தெருவாக் குப்பை வண்டி தள்ளியபடிக் குப்பை அள்ற அவளோடக் கையால எப்படிப்பா உன்னால சாப்பிட முடியும்?. ” – அப்பா அம்மா இருவரும்

139. புது வருஷப் பரிசு - சிறுகதை

Image
  புது வருஷப் பரிசு                                       - ஜூனியர்தேஜ் ( மக்கள் குரல் 02.01.2024) உ ங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் – என்ற யோவான் – 16:20 பைபிள் வசனத்துடன் தொடங்கியது அன்றைய விடிகாலை டெலிவிஷன் நிகழ்ச்சிகள். தனக்காகவேச் சொல்லப்பட்டதைப் போல உணர்ந்தாள் க்ளாரா. தொடர்ந்து, ஓடிக் கொண்டிருந்த, டெலிவிஷனில் புத்தாண்டு   சிறப்பு நிகழ்ச்சியாக, புனிதர் தேவ சகாயம் அவர்களின் உரையும், உரையாற்றும் பொருளுக்குத் தக்கபடி, பின்னணிக் காட்சிகளும் ( Representative clipings) ஒளிபரப்பப்பட்டு, உரையின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்த்தது. கா ய்ந்துபோன ஒரு சிறு மல்லிகைக் குத்து ஒன்றை க்ளோஸப்பில் காட்டினார்கள். அதன் வேரடியில் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றும் காட்சி அடுத்த ஷாட். குறுத்துக்கள் பட்டையைப் பெயர்த்துக் கொண்டு வருவதும், நான்கைந்து இலைகள் விரிந்து பரவுவதும், அரும்புகள் எழும்புவதும், மல்லிகைப் பூக்கள் சில மலர்ந்து சிரிப்பதையும் பேச்சாளரின் கருத்துச் செறிவு மிக்க உரையோடுக் கோர்வையாகக் காட்டியபோது, க்ளாராவின் , மனதில் ஒரு தெளிவு பிறந்தது. பின்னணியை ரசித்துக் கொண்டும்,