Posts

Showing posts from July, 2022

கலியன் மதவு (அத்தியாயம் – 14)

Image
  கலியன் மதவு (சமூக நாவல்)                                       - ஜூனியர் தேஜ் அத்தியாயம் – 14 ஆனந்த விகடன் 27.07.2022 “ அ ய்யா, கோயிலு கோபுரத்து மேல நின்னு என்னா செய்யுறீங்க... ? ” கலியன் பதற்றத்தோடு கேட்டான். “அரசஞ் செடிங்க அங்கங்கே கிளம்பியிருந்துச்சா ...! அதையெல்லாம் புடுக்கிப் போட்டேன் . ... ! ” சொல்லிக்கொண்டே கீழே கிடக்கும் செடிகளை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார் . “ அய்யா ...! அய்யா ...! ஓரமா வராதீங்க ...!” பதறினான் கலியன் . “.............................” கலியன் பதற்றத்துக்கு மதிப்பளித்து , மாதய்யா கால்களை ஒரு அடி பின்னால் இழுத்துக்கொண்டு நின்றார் .. “ஆத்துக்குக் குளிக்கப்போன அய்யாவை இன்னும் காணோமே !’ னு வீட்டுல அம்மா கவலைப்பட்டுக் குந்திக் கிடக்காங்க .” “ நீங்களோ, இப்படி கோபுரத்துல ஏறி உட்காந்துருக்கீங்களே... ! இது ஒங்களுக்கே நல்லாருக்கா ...! தப்பித் தவறி விழுந்துட்டா வருமா... !’ “.............................” “ அடிபட்டு முறிஞ்ச காலு ...! சேருவனானு சேந்து இப்பத்தான் சரியா வந்துருக்கு... இப்பப் போயி... ? ” “கலியா... ! இதுபோல வேலைங்