Posts

Showing posts from December, 2022

98. ஹீரோ (ஒரு பக்கக் கதை)

Image
98. ஹீரோ (ஒரு பக்கக் கதை - ஜூனியர்தேஜ் ( கதிர்ஸ் – ஜனவரி -2023) “ ர மாவும் லலிதாவும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த அலுவலகத்தில் இரண்டு சூப்பரண்டுகள் இருந்தார்கள். ஒருவர் ராமபத்ரன். எளிமையாக இருப்பார். ஒரு போதும் குரல் உயர்த்திப் பேசாதவர். மிகவும் ரிசர்வ்டாக இருந்ததால், ‘ராமபத்ரன் ஒரு சிடுமூஞ்சி. பாசமாய்ப் பழகத் தெரியாதவர் என்று நினைத்தார்கள் ரமாவும், லலிதாவும். அதே அலுவலகத்தில் இன்னொரு சூப்ரண்ட் எழிலரசன். “ஹாய்...! எப்படி இருக்கீங்க...? ” குசலம் விசாரிப்பார். பார்க்கும்போது புன்னகைப்பார். “சாப்டீங்களா...? டீ குடிச்சீங்களா? ” விசாரிப்பார். எழிலரசனின் இந்த ஃபார்மல் விசாரிப்புகளில் திருப்தியுற்ற அந்த மங்கையர்கள் சூப்ரண்ட் எழிலரசனின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். *****- அ ன்று ரமாவும் லலிதாவும் டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு ரௌடிகள் தவறான திசையில் வந்து இவர்கள் வண்டியில் இடித்ததோடு, தகாத வார்த்தைகளைப் பேசினார்கள். அந்த நேரத்தில் எழிலரசன் தன் காரில் இவர்களைக் கடந்து போனார். இவர்களைப் பார்த்துவிட்டுப் பாராததுபோலப் போவதை அவர்களும் பார்த்தார்கள்.

97. தலைப் பொங்கல் சீர் (ஒரு பக்கக் கதை)

Image
  97. தலைப் பொங்கல் சீர் (ஒரு பக்கக் கதை) - ஜூனியர்தேஜ்   ( கதிர்ஸ்-ஜனவரி -2023) போ கியலுக்கு முதல் நாள் மாலை பத்மனாபனும் அவன் மனைவியும் கடைத் தெருவுக்குச் சென்றார்கள். சாலையோரக் கடைக்காரர்கள் எல்லோரும் எழுந்து சல்யூட் செய்தார்கள் பத்மனாபனுக்கு. அந்தக் கடைத்தெருவில் ஏட்டாக இருந்தபோது பல வருடங்கள் பீட் பார்த்தவராயிற்றே. இன்ஸ்பெக்டர் ப்ரோமஷனில் வேறு ஊருக்குப் போனாலும், மக்கள்   நேர்மையான போலீஸ்காரரை மறப்பார்களா என்ன?. இன்ஸ்பெக்டர் பத்மனாபன் தம்பதியர் முதலில் ஜவுளிக் கடைக்குச் சென்றார்கள். புடைவை, சரிகை வேட்டி காஸ்ட்லியாக எடுத்தார்கள். கடைக் கடையாக ஏறி இறங்கி, அவர்கள் வீட்டு வழக்கப்படி வெண்கலப்பானை, துடுப்பு, வடிதட்டு என்று எல்லாம் வாங்கினார்கள் பத்மனாபன் தம்பதியர். மஞ்சள், பழம், பாக்கு வெற்றிலை ... மங்கலப் பொருட்கள் பர்ச்சேஸும் கம்ப்ளீடட். ஜாதிமல்லி, சந்தனமுல்லை, மல்லிகை என பலவிதமான புஷ்பங்களைக் கடைசியாக வாங்கி பையின் மேல் மட்டத்தில் வைத்துக்கொண்டார்கள். ******- ‘போ கியலும் அதுவுமா விடிகாலைல யாரு கதவு தட்டுறா? ’ அடுப்படியில் போகியலுக்காகச் சிறப்புச் சமையலு

96. புனிதப் பயணம் (சிறுகதை)

Image
96. புனிதப் பயணம் (சிறுகதை)                                       - ஜூனியர் தேஜ் (   –25  - 12 -2022) “ இ ந்த வருஷக் கிறிஸ்துமஸ்க்கு கிராமத்துக்கு வந்துரு மேரி ..” ஆசையாக அழைத்தார் ஆல்பர்ட் . “ வந்துடறேன்ப்பா .” என்ற மேரி , “ அம்மா , பக்கத்துல இருந்தாப் போனைக் கொடுப்பா !” என்றாள் . ஹலோ , மேரி , உனக்கு ரொம்பப் பிடிச்சக் “ குடில் அமைச்சி ’ டெக்கரேட் பண்றேன் . டூட்டி கீட்டினு ஏதாவது சொல்லி வராம வெச்சிராதே ...!” என்றாள் அம்மா எடுத்த எடுப்பில் . “ கண்டிப்பா வந்துடறேம்மா ...! சீஃப் டாக்டர் கிட்டே சொல்லி வெச்சிட்டேம்மா ; எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன் ; நீ போயிட்டுவானு சொல்லிட்டாரு ;. கண்டிப்பா வருவேம்மா !” “ ஓ கே டா கண்ணு ..!” ஃபோனுக்கு முத்தம் கொடுத்தாள் அம்மா . *****- கி றிஸ்துமஸ் பண்டிகை என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் . அரையாண்டுத் தேர்வுகள் முடிந்துப் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை விடுவார்கள் . வருடத்தின் இறுதி வாரத்தில் வரும் மகிழ்ச்சிப் பண்டிகை . காலாண்டுத் தேர்வு முடிந்ததும் தசரா விடுமுறையில் உலகம் முழுதும் பரவியுள்ள இந்துக்கள் கொலு வை

95. ரெட் லெட்டர் டே (சிறுகதை)

Image
95. ரெட் லெட்டர் டே  ( சிறுகதை )                                        - ஜூனியர்   தேஜ் ( விகடன் – 25  - 12 -2022) “ பொ ழுது விடிந்தால்  ‘ கிறிஸ்மஸ் ’  பண்டிகை .” சீகன் பால்கு தேவாலயத்தில்  ‘ மிட்நைட் மாஸ் ’  களைக் கட்டியிருந்தது . கோட் சூட் என வித்தியாசமாக உடுத்திக் கொண்டு மிடுக்காக ,  தேவாலய வளாகத்திற்கு வரும் இளைஞர்களையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தார் மைக்கேல் . அருகே உட்கார்ந்திருந்த மகள் எஸ்தர் ,  முகநூல் மூலம் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் . *****- “ அ ப்பா .” எந்நேரமும் ,  எஸ்தரின் சிறப்பான மணவாழ்வு பற்றியேச் சிந்தித்துக் கொண்டிருந்த மைக்கேல்    சுயநினைவுக்கு வந்தார் . “ சொல்லு எஸ்தர் .”. “ நாளைக்குத் தங்கச்சிங்களை அழைச்சிக்கிட்டு அவங்க வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாடப் போகப் போறதா அம்மாச் சொன்னாங்கதானே ?” “ ஆமாம் .  அதுக்கென்ன இப்ப ?  அந்தச் சைத்தான் எங்கே போனா எனக்கென்ன ?”  கடுப்பானார் மைக்கேல் . பொது இடம் என்று கூடப் பார்க்காமல் குரல் வெடித்து வெளிவந்துவிட்டது மைக்கேலுக்கு . “ அம்மாவை சைத்தான்னு திட்டாதீங்கப்பா .!” அப்பாவைச் சமாதானப்படுத்தினாள் எஸ்தர் . உன்னை