Posts

Showing posts from February, 2023

113. மாற்றம் (ஒரு பக்கக் கதை)

Image
113. மாற்றம் (ஒரு பக்கக் கதை) கதிர்ஸ் மார்ச் 2023                                       - ஜூனியர் தேஜ் ட ம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் திவாகரன். பிரஷர் மாத்திரை எடுக்க அலமாரி திறந்தான்.   “ ட மால்...! ” பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் , மேஜை விளிம்பில் பலமாக இடித்துக் கொண்டாள் வனிதா டீச்சர். பொறி கலங்கிவிட்டது. ' டமா ' ரெனச் சாய்ந்தது தண்ணீர் டம்ளர் . .   " அ றிவிருக்காடீ உனக்கு ...! ?"   காய்ந்தான் திவாகரன் . ‘பலமா இடிச்சிக்கிட்டு வலியோடத் துடிக்கிறேன், இவரானா, இப்படிக் கடுப் ப டிக்கறாரே...! ? ” நொந்துகொண்டாள், கண் கலங்கி விட்டது.   அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்   வனிதா .     ஆ ன் டைம் அரைவல். அவசர அவசரமாக வகுப்புக்கு விரைந்தாள் .  ப்ரேயர் மணி அடித்தது . மாணவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள் .   தா மதமா கிவிட்டப் பதட்ட த்தில் ஓடிவந்தான் ஒரு மாணவன் . “டமால்...” மேஜை விளிம்பில் பலமாய்   இடித் துக் கொண்டான். ‘ டமா’ரென டீச்சரின் தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து உருண்டது. வழ

112 . ஒத்திகை (ஒரு பக்கக் கதை)

Image
112 . ஒத்திகை (ஒரு பக்கக் கதை) - ஜூனியர்தேஜ் ( கதிர்ஸ் மார்ச் -2023) பெ ட்டியைத் திறந்தான் கதிரேசன் . எல்லா வேட்டிகளையும் எடுத்துப் போட்டான் . எல்லாச் சட்டைகளையும் பரத்தி வைத்துப் பார்த்தான் . இருப்பதிலேயே மங்கலான வேட்டியை எடுத்தான் . வேட்டியைக் கொஞ்சம் ஏற்றல் தாழ்த்தலாகக் கட்டிக்கொண்டான் . சாயம் போன டல் கலர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான் . நி லைக் கண்ணாடி முன் வந்து நின்றான் கதிரேசன் . வாயை ஒரு புறமாக இழுத்துக் கோணினாற்போல் வைத்துக் கொண்டு பார்த்தான் . தோள் பட்டையை இறக்கினாற்போல் கூன் போட்டபடி நின்றான் . வாயைக் கோணும்போது ஒரு குறிப்பிட்ட அளவில் கண்களைச் சுருக்கினான் . பற்கள் சீரற்றுத் தெரியுமாறு வைத்துக் கொண்டான் . இடது காலின் இடப்புறம் வலது காலின் விரல்கள் மட்டும் பதியும்படி நின்றான் . வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே இடதுகையைப் பதித்தான் . வலது கை ஆள்காட்டி விரலால் வலது பின்னந் தலையில் சொறிந்து கொண்டான் . இதையேப் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் . நம்பிக்கையோடுக் கிளம்பினான் . கையில் ஷாப்பர் பை இருந்தது . நீங்கள் இந்தக் காட்சியைப் பார்த்

111. மெனு - சிறுகதை

Image
111. மெனு - சிறுகதை                             -ஜூனியர் தேஜ் இ யற்கை எழில் கொஞ்சும் கிராமம் அது . சரவணன் ..., விடிகாலைத் துயில் எழுந்தான் . குடில் கதவைத் திறந்தான் . சீலீரென்று உள் நுழைந்த காற்றைச் சுவாசித்தான் . வாசலில் வேப்ப மரம் படர்ந்து , செழித்து வளர்ந்து நின்றது . தாழ்ந்து நின்ற கிளையிலிருந்து குச்சி உடைத்தான் . பற்களால் கடித்துத் , துலக்கித் துப்பிக்கொண்டே கொல்லைப்புறமாக நடந்தான் . -*****- பா னைத்தண்ணீர் எடுத்துப் பருகினான் . வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொண்டான் . மாட்டுத் தொழுவம் சென்றான் . கவணையிலிருந்து இழுத்துப் பரத்திய வைக்கோலைத் திரட்டி மீண்டும் கவணைக்குள் போட்டான் . சாணத்தைத் தட்டுக் கூடையில் அள்ளி , தொழு உரக் குழியில் கொட்டினான் . கன்றை அவிழ்த்துவிட்டான் . முட்டி முட்டிக் குடித்தது கன்று . சுரப்பு இறங்கியதும் , கன்றை இழுத்துக் கட்டிவிட்டு ‘ சர் சர் சர் ..' எனப் பால் பீய்ச்சினான் . கையில் பிசுபிசுத்த விளக்கெண்ணைப் பிசுபிசுப்பை பசுவின் முதுகில் தட்டித் தடிவினான் . -*