கூண்டுக் கிளி (தினமணி கதிர்)(சிறுகதை)

கூண்டுக் கிளி ( சிறுகதை ) - ஜூனியர் தேஜ் (தினமணி கதிர் - 06.04.25) “ அ ம்மாவுக்கு நல்லகாலம்தான் ...! ” வழக்கமான மெஸ்மரிசக் குரலைக் காதில் வாங்கியபடியே ஜன்னல் கதவுகளை விரியத் திறந்தாள் அகல்யா . ஜன்னலுக்கு வெளியே, கிழிசல் துணிகள், பீத்தல் சாக்குகள், தேங்காய் நார்கள், இறுதி யாத்திரையின்போது விசிறப்பட்டுக் காய்ந்த மாலைகள், நசுங்கிச் சிதைந்த வாட்டர் பாட்டில்கள், விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் நெகிழிப்பைக் கிழிசல்கள், தலைமுடிகள், வாழையிலைச் சருகுகள், எதிர் சாரியில் வளர்ந்து நிற்கும் மரம் அவ்வப்போது உதிர்க்கும் பழுப்புகள் என என்னென்னவோ ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டு, சிக்கிச் சின்னா பின்னமாகி சிதறிக் கிடக்கும் கருங்கல் ஜல்லிகளோடு, குண்டும் குழியுமாகக் கிடந்த, பராமரிப்பற்றப் பத்தடிச் சாலையைப் பார்த்தாள். திறந்த ஜன்னல் வழியாக வெளிச்சம் உள்ளேப் புகுந்து அகல்யாவின் முகத்தில் பட்டு அறையினுள்ளேயும் பரவியது. “ஜன்னலைத் திறக்காதேடீ புழுதி உள்ளே வந்துடும்..." என்று அம்மா சொல்வதும்...; “ஜன்னல...