என் உயிரே... மயூரி...!( நாவல்)
என் உயிரே... மயூரி...! En Uyir e... Mayuuri…! நாவல் Novel Author: ஜூனியர் தேஜ் Junior Tej For more books https://www.pustaka.co.in/home/author/junior-tej பெற்றோர்க்குச் சமர்ப்பணம் A ஜானகி V அருணாசலம் (தேஜ்) ******* குரு வணக்கம் ******* பொருளடக்கம் அணிந்துரை வாழ்த்துரை வாழ்த்துரை விமரிசனங்கள் ******** அணிந்துரை கவிஞர் பாரதன் - கம்பம் ஜூனியர் தேஜ் ; வித்தியாசமான பெயர் ; அவரும் வித்தியாசமானவர் ; அவர் எழுதும் கதைகளும் வித்தியாசமானவை. மனநல ஆலோசகர் என்பதாலோ என்னவோ, அவருடைய படைப்புகள் அனைத்துமே மனித மனங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. “மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு – அதைத் தாவ விட்டால் தவ்வி ஓட விட்டால், நம்மைப் பாவத்தில் தள்ளிவிடும்.” என ஒரு திரைப்படப் ப...