113. மாற்றம் (ஒரு பக்கக் கதை)

113. மாற்றம் (ஒரு பக்கக் கதை)

கதிர்ஸ் மார்ச் 2023

                                      -ஜூனியர் தேஜ்

ம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் திவாகரன்.

பிரஷர் மாத்திரை எடுக்க அலமாரி திறந்தான்.

 

மால்...!

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில், மேஜை விளிம்பில் பலமாக இடித்துக் கொண்டாள் வனிதா டீச்சர்.

பொறி கலங்கிவிட்டது.

'டமா'ரெனச் சாய்ந்தது தண்ணீர் டம்ளர்..

 

"றிவிருக்காடீ உனக்கு...! ?"

 காய்ந்தான் திவாகரன்.

‘பலமா இடிச்சிக்கிட்டு வலியோடத் துடிக்கிறேன், இவரானா, இப்படிக் கடுப்டிக்கறாரே...!?

நொந்துகொண்டாள், கண் கலங்கிவிட்டது.  

அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்  வனிதா.

 

 ன் டைம் அரைவல்.

அவசர அவசரமாக வகுப்புக்கு விரைந்தாள்

ப்ரேயர் மணி அடித்தது.

மாணவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள்.

 

தாமதமாகிவிட்டப் பதட்டத்தில் ஓடிவந்தான் ஒரு மாணவன்.

“டமால்...”

மேஜை விளிம்பில் பலமாய்  இடித்துக் கொண்டான்.

டமா’ரென டீச்சரின் தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து உருண்டது.

வழக்கம் போல டீச்சரின் சுடுசொல்லை, எதிர்ப்பார்த்து, குற்ற உணர்வோடு, நடுங்கியபடி நின்றான் அந்த மாணவன். 

ரொம்ப வலிக்குதா? மொழங்காலை தேச்சி விட்டுக்கோ!என்றாள் வனிதா டீச்சர்.

***********

 

 

Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை