138. மினிமலிசம் (கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை)
மினிமலிசம் (கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை) - ஜூனியர்தேஜ் விகடன் (25.12.2023) ப டகுப் போன்ற கார் அந்த குடிசையின் வாயிலில் நின்றது. வாசல் திண்ணையில் அமர்ந்து, சிம்புகளை சீவுவதும், கொடிகளை ஒட்டுவதும், களிமண்ணால் பொம்மைகளை வனைவதும், அதற்கு ஆடை அலங்காரங்கள் செய்வதுமாய் ஈடுபாட்டுடன் கிறித்துமஸ்க்காக அலங்காரங்கள் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்த சூசை, கை வேலைகளை அப்படியேப் போட்டுவிட்டு உள்ளே ஓடினான். முதலாளியய்யா கார் வந்து நிக்குதும்மா.. என்று சூசை சொன்னதும், ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள் சூசையின் அம்மா மேரி. representational image கார் ஓட்டுநர் இருக்கைக்கு வெள...