6. கற்றது ஒழுகு (சிறுகதை)
6.கற்றது ஒழுகு -ஜூனியர் தேஜ் 09.04.2000 தினமணி கதிர் “ சா யாவனம் ...! சாயாவனம் ...! , உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு ...! ” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது . இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தி ற்குத் திருமணம் ; நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள் ; சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள் . வாடகைப் பந்தல் முனுசாமி , “ நாளை காலைல வந்து பந்த ; g போட்டுடறேன் ...! ” என்று சொல்லிச் சென்றுவிட்டான் . நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும் . இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார் ; பெஞ்சு , பந்திப்பாய் , பெட்ரோமாக்ஸ் விளக்கு எல்லாம் ஆர்டர் செய்த இடத்தில் ஒரு எட்டு ஞாபகப்படுத்திவிட்டு வந்துவிட்டான் சாயாவனம் ; புரோகிதரிடம் சொல்லிவிட்டு அப்போதுதான் வந்தான் . இன்...