83. சரஸ்வதி பூஜை (சிறுகதை)
83. சரஸ்வதி பூஜை ( சிறுகதை ) - ஜூனியர் தேஜ் ( 30 - 09 -2022) ஆனந்த விகடன் ‘ ஷெ ட்யூல்ப் படி ரயில் போனாலே மதியம் ஒண்ணரை மணி ஆயிடும் வீடு போய்ச் சேர ; அதுக்கப்பறம் குளிச்சி ரெடியாகி சரஸ்வதி பூஜை முடிக்கணும் ; நேத்தும் லோலோன்னு அலைச்சல் ; புது இடம்ங்கறதால சரியாத் தூக்கமுமில்லை ; ‘ பர்த் ’ ஏதாவது கிடைச்சா சௌகரியமா இருக்கும் ’. கொஞ்சம் உடம்பைச் சாய்க்கலாம் . விஸ்ராந்தி எடுத்கலாம் . என்றெல்லாம் நினைத்தபடி ‘ பி ஒன் ’ கோச் நோக்கிச் சென்றாள் மிஸ் ரேவதி. -********- ‘ அப்பாவே காலா காலத்தில் பூஜையை முடித்துவிடலாம் ; பிடிவாதமாக “ நீ வந்ததும்தான் பூஜை ...” என்கிறார் ; வயது ஆக ஆக பக்குவம் வரும் என்பார்கள் ; ‘ எரிக் எரிக்ஸன் ’ சொல்றதைப் போல சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய வயசு அப்பாவுக்கு ; ஞானம் வரவேண்டிய வயசு ; ஆனால் அப்பாவுக்கோ பிடிவாதம்தான் அதிகமாற...