105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசக

105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசகர்| 

My Vikatan

விகடன் 
28.01. 2023
சர்வதேச டேட்டா ப்ரைவஸி தினம் (International Data Privacy Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் தனியுரிமையை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.

 நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி.

மொபைல் இன்றி இல்லை உலகு என்பது புதுமொழி.

 கேஜி முதல் பிஜி படிப்பு வரை ஆன்லைன் கற்றல் கற்பித்தல் மூலம் பிரசித்தமானது கொரோனா கொடுத்த கொடை.

அது மட்டுமா? ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் திட்டமும்தான்.

பெட்டிக் கடை முதல் ஐ டி கம்பெனி வரை ஆன்லைன்...! ஆன்லைன்...! ஆன்லைன்.. ...!

டிமாண்ட் அதிகமாகி விட்டதால், சில சமூக விரோத சக்திகள் மனிதர்களின் அவசரத்தையும், ஆர்வத்தையும், இச்சைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.


ஸ்டார் ஓட்டல்களிலும், லாட்ஜ்களிலும் காட்டேஜ்களிலும் மிளகு சைஸ், துவரை சைஸ் காமிராக்கள் வைத்து அந்தரங்கத்தை வெளிப்படையாக்குவதை திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பார்க்கிறோம்.

அதைப் பார்த்துவிட்டு, அந்த நேரத்தில் ஆதங்கப் படுகிறோமே தவிர, அந்தரங்கம் பற்றிய நமது புரிதலை விசாலமாக்கிக் கொண்டோமா..? இல்லையே....!

அறியாமையினாலோ, அல்லது பேராசையினாலோ நாம் நம் தரவுகள் என்று சொல்லப் படுகிற, நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய Data க்களை பறிகொடுத்துவிடுகிறோமே...!

கணினி அல்லது மொபைல் ஃபோனில் APP  பதிவிறக்கம் செய்தல் என்பது ஒரு பொழுது போக்காகிவிட்டது.

ஒவ்வொரு முறையும், நம் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், தொலைப் பேசி எண் என கொடுத்துவிடும் நிலை.

அது எங்கு செல்கிறது, எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை.

உதாரணமாக, அவ்வப்போது, உங்களுக்கு ஒன்னரை கோடி பரிசு விழுந்துள்ளது, ,இந்த எண்ணை அழுத்தவும் என்றோ

கடன் வேண்டுமா, அணுகுங்கள் என்றோ ஒரு நாளைக்கு பல நம்பர்களிலிருந்து அழைப்புகள் வருவதையும் நாம் தினம் தினம் அனுபவிக்கிறோம்.

அவர்களுக்கெல்லாம், நம் எண் எப்படித் தெரியும்? நம் ஈ மெயில் விலாசம் எப்படித் தெரியும்?

நாமே நம்மை அறியாமல் தந்துவிடுகிறோம்.

கடையில் ஏதேனும் பொருட்கள் வாங்கும் போது, ஒரு கூப்பன் கொடுத்து, அதை நிரப்பிப் போட்டால், குலுக்கல் முறையில் பரிசு என்கிறார்கள். அந்தப் பரிசுக்கு ஆசைப்பட்டு, நாம் நம் தரவுகளை அந்த நிறுவனத்துக்குத் தந்து விடுகிறோம்.

குழந்தைகள் ஆன் லைன் படிப்பை உள்வாங்குகிறதோ இல்லையோ, பலவிதமான Game App பதிவிறக்கம் செய்து விளையாடுகிறது.

பெற்றோர்களும்அவன் செல் போன்ல என்னென்னமோ வித்தையெல்லாம் செய்யறான் என்று பெருமையாயகவும் பேசுகிறார்கள்.

இது போதாதா...! பிள்ளைகள்இதை முயன்று பார்த்தால் என்ன? அதை முயன்று பார்த்தால் என்ன..? என்று Trial and Error  முயன்று கற்கத் துவங்கிவிடுகின்றன.

இப்படிப்பட்ட சூழலைத்தான் சமூக விரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

கணினி, அல்லது மெபைலில் இலவச செயலி (APP)யை பதிவிறக்கம் செய்கிற குழந்தைக்கு அந்தச் செயலியில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளோ, நிபந்தனைகளோ எப்படிப் புரியும்.

அறியாமையாலும், அவசரத்திலும், ஆர்வத்திலும் Yes ..No என்று கேட்கப்படுகிற இடத்திலெல்லாம்  Yes கொடுத்து ஓ கே செய்து விடுகிறது.

      விளைவு... ...! இந்தச் செயலி நிறுவனம் அந்த மொபைலில் இருக்கிற தொடர்பு எண்கள், புகைப்படங்கள் மற்றும் அதில் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் அபேஸ் செய்துவிடுகிறது.

      நமக்கு மட்டுமே தெரிந்திருக்கவேண்டிய தரவுகள், அம்பலப்படுத்தப் படுவதும், அழிக்கப்படுவதும் மிக மிக இயல்பாகிவிட்டது இப்போது.

      திருடப்பட்ட தரவுகளை ப் பயன்படுத்தி வங்கி இருப்பு, ஆதார், என வரும் பற்பல குறுஞ்செய்திகளை படித்தும், விஞ்ஞான பூர்வமாக ஏமாற்றப் பட்ட பிறகு குய்யோ முறையோ என அலறி என்ன பயன்..  அறியாமையினால் ஏற்படும் விளைவுகள் ஒரு புறம் இருக்க பேராசையினால் தங்கள் தறவுகளை இழந்து வாடும் பாமரர்களின் நிலை கொடிது.

      சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் வண்ணமயமான, கவர்ச்சிகரமான செயலிகளின் மூலமாக தனி மனிதருடைய சமூகவியல், உளவியல் விபரங்களையும் திரட்ட முயல்வதை அறியாமல் படித்த மனிதர்களே அதில் விழுந்துவிடுகிறார்கள்.

செயலி மடக்கி மடக்கிக் கேட்கின்ற பல கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளிப்பதாக நினைத்துக்காண்டு சமூக உளவியல் விபரங்களைக் பறிகொடுத்துவிடுகிறார்கள்.

      அடுத்து ஆன்லைன் சந்தைகளின் செயலிகள் மூலம் களவாடப்படும் தரவுகள்தான் மிக மிக அதிகம்.

தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அவர்களிடன் அளவலாவி தரமற்றதை தலையில் கட்டிவிட முடியும் என்பதை அறியாமல் ஆன்லைன் சந்தையில் தங்களைத் தொலைப்பவர்கள் ஏராளம் ஏராளம்...!

நாம் மொபைலுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். ஒரு செயலி இலவசத் தொகைக்கான பற்றுச் சீட்டு கொடுத்துவிட்டால் போதும், எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம் செய்துவிடுகிறோம்.

அறிந்தோ அறியாமலோ, நாமே நம் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தக் காரணகர்த்தாவாக அமைகிறோம் என்பதே உண்மை.

ஒன்று மட்டும் நிச்சயம்..பதிவிறக்கம் செய்வது நாம். ஆனால் பயனடைபவர்கள் அந்தச் செயலியை உருவாக்கியவர்கள் என்பதை நாம் உணர்வதோடு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் இது.

      இந்த உலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை, அப்படி இருக்கையில் எப்படி இலவசச் செயலியை வெளியிடமுடியும்? என்பதை மனதார உணர்ந்தாலே நம் தரவை பாதுகாத்துக் கொள்ளலாம்.

      பல நேரங்களில் பாதுகாப்பற்ற தரவுகளை தங்கள் அறியாமையால் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நட்டமடைவதைப் பார்க்கிறோம்.

I.T (Information Technology) என்பது 21 ஆம் நூற்றாண்டின் நாடித்துடிப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது

எப்படி மனித மூளையில் ஒவ்வொரு செல்லும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமானதாகவும் பேணப் படவேண்டியது அவசியமோ அதே அளவுக்கு  தரவு அதாவது  Data  என்ற ஆதார ஸ்ருதியான எண்கள், எழுத்துக்களையும் கண்ணெனக் காக்க வேண்டியது நம் கடமை.

தரவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதித்தான் ஜனவரி 28 ம் நாளைதரவுப் பாதுகாப்பு தினமாகவே அறிவித்திருக்கிறார்கள்.  இந்த நாளில் தரவுகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த செயல்முறைகளை ஊக்குவித்தலோடு. விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல் நம் கடமையாகும்.

இந்த நாளில், இந்தியா உட்பட, அமெரிக்கா, கனடா மற்றும் நாற்பத்தேழு  ஐரோப்பிய நாடுகளும் தரவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை தீவிரமாக ஊட்டுவதிலிருந்து இந்த நாளின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் நாம் அறியலாம்.

இது எலக்டரானிக் யுகம். அதைத் தவிர்த்து நாம் வாழமுடியாது. ஒன்று மட்டும் உணர வேண்டும்.

எதற்கும் ஒரு விலை உண்டு என்பதை மறந்து, இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு துரத்தும் மனோபாவத்தை மாற்றிக்கொள்வது ஒன்றுதான் தரவுப் பாதுக்காப்புக்கு வழி.

 வினோபாஜீ சொன்னதுபோல் நம் உடனடி தேவை

மனோபாவ மாறுதல். 

கட்டுரையாளர்உளவியல் ஆலோசகர்

Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை