113. மாற்றம் (ஒரு பக்கக் கதை)

113. மாற்றம் (ஒரு பக்கக் கதை) கதிர்ஸ் மார்ச் 2023 - ஜூனியர் தேஜ் ட ம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் திவாகரன். பிரஷர் மாத்திரை எடுக்க அலமாரி திறந்தான். “ ட மால்...! ” பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் , மேஜை விளிம்பில் பலமாக இடித்துக் கொண்டாள் வனிதா டீச்சர். பொறி கலங்கிவிட்டது. ' டமா ' ரெனச் சாய்ந்தது தண்ணீர் டம்ளர் . . " அ றிவிருக்காடீ உனக்கு ...! ?" காய்ந்தான் திவாகரன் . ‘பலமா இடிச்சிக்கிட்டு வலியோடத் துடிக்கிறேன், இவரானா, இப்படிக் கடுப் ப டிக்கறாரே...! ? ” நொந்துகொண்டாள், கண் கலங்கி விட்டது. அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் வனிதா . ஆ ன் டைம் அரைவல். அவசர அவசரமாக வகுப்புக்கு விரைந்தாள் . ப்ரேயர் மணி அடித்தது . மாணவர்கள் அமைதியாக எழுந்து ...