114. மூட்டை (ஒரு பக்கக் கதை)
114. மூட்டை (ஒரு பக்கக் கதை) - ஜூனியர் தேஜ் ( 2023 – எழுத்தாளர் சந்திப்பில் அருணையில் பூத்த மலர்கள் II ல் பிரசுரமான சிறுகதை ) அ ந்தச் சிறிய குடிசை வீட்டில், தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து, பள்ளியில் தந்த வீட்டுப் பாடங்களை எல்லாம் எழுதி முடித்தான் அன்பரசன். பள்ளிக்குச் செல்லத் தயாரானான். புத்தகப் பையிலிருந்து அனைத்தையும் எடுத்து வெளியில் எடுத்தான். தமிழ்ப் புத்தகம், நோட்டு, கட்டுரை ஏடு, கையெழுத்து ஏடு அனைத்தையும் சரிபார்த்துவிட்டுப் பைக்குள் வைத்தான். அதே போல ஆங்கிலப் புத்தகத்துக்கான இணைப்புகள்; கணிதத்திற்காக புத்தகம் நோட்டு தவிர, ஜியோமிதிப் பெட்டி, ஒரு அடி ஸ்கேல்; அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் முறையே நோட்டுகள் தவிர, செய்முறை ஆல்பம், அட்லஸ்; எல்லாவற்றையும் கருத்தாகப் பார்த்துப் பார்த்து எடுத்துப் பைக்குள் அதனதன் இடத்தில் வைத்தான் அன்பரசன். ...