116 . மூன்றாம் விதி (சிறுகதை)
116. மூன்றாம் விதி - ஜூனியர்தேஜ் அனிச்சம் - மே - 2023 “ அ டடா... சுத்தமா மறந்துட்டேன்... ? ” நெற்றியில் உள்ளங்கையால் தட்டிக் கொண்டார் அப்பா முருகனின் தந்தை சிவா. முருகம் முகம் சுருங்கியது. சிவா குற்ற உணர்வில் மருகினார். வேலை முடித்துக் கிளம்பும் வரைக்கும் அதை இழைத்துப் போடு, இதற்கு ஸ்க்ரூ போட்டு முடுக்கு. கதவுக்குப் படிமானம் பாரு, ஹூக் டைட்டா இருக்கு பாரு லூஸ் பண்ணிவிடு, என்று ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருந்ததில் மகன் அவசியமாகத் தேவை என்று சொன்ன ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கி வர சுத்தமாக மறந்து விட்டார் சிவா. “அப்பா...! ” மகனின் அழைப்பில் ஒரு வித ஏளனம் இருந்தது. “ம்...! ” என்றார்; குனிந்த தலை நிமிராமல். “சொல்றேனேனு வருத்தப்படாதீங்கப்பா... குடும்பத்தலைவர்னு சொல்லிக்கிட்டாப் போதாது. அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கணும்...! ” சுருக் ’ கெனச் சொல்லிவிட்டான் முருகன். “டேய்! பெத்த தகப்பனை இப்படி மரியாதையில்லாமப் பேச உனக்கு என்ன தெகிரியம்..? ” கேட்டுக்கொண்டே வந்த மனைவியை அடக்கினார் சிவா. “வாங்கி வராதது என் தப்புதானே. உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சித்தான் ஆவணும். தப்புப்பண்ணிட்டா தண்...