122. பாட்டுத்திறத்தாலே (சிறுகதை)
சுற்றுலாக் கதைகள் பயணம் பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே கவர்ச்சியானது . – பால் தெரூக்ஸ் க வனச்சிதறலுக்காக அலைகிறோம் , ஆனால் நிறைவிற்காக பயணிக்கிறோம் . – ஹிலேரி பெல்லாக் வ ருடத்திற்கு ஒருமுறை , நீங்கள் இதுவரை சென்றிராத இடத்திற்குச் செல்லுங்கள் . - தலாய் லாமா ப யணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல . மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம் . வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் உணவு தேடிக் காடு மேடெல்லாம் அலைந்தான் . பிற்கால மனிதன் திரைகடலோடியும் திரவியம் தேடினான் . இன்றைய மனிதன் இன்பம் , இறைத்தேடல் , பொழுதுபோக்கு , அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம் . -முனைவர் ஆரோக்கிய தனராஜ் சுற்றுலாச் சிறுகதை 1 122 பாட்டுத்திறத்தாலே ஜூனியர்தேஜ் (விகடன் 31.05.2023) “போ ட்டிங் ’ டி...