134. தலைமுறைகள் (சிறுகதை)
134. தலைமுறைகள் (சிறுகதை) நற்றிணை 184 ஒரு மகள் உடையேன் மன்னே அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள் இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் அணி இயற் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே தலைமுறைகள் ( மனவியல் சிறுகதை ) - ஜூனியர் தேஜ் (கௌரா இலக்கிய மன்றம் 3வது பரிசு) (2023) “ ஃ பிராய்டிஸத்தில் கரைகண்ட சைக்கோ அனலிஸ்ட் டாக்டர் நவீனன் ‘ வளர்ச்சி உளவியல் ’ என்கிற மூலப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார் . “ என்னிடம் பால் மணம் மாறாத 12 பச்சிளம் குழந்தைகளைத் தாருங்கள் , குழந்தைகளின் பின்னணி எதுவானாதாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்புகிறபடி ;...