136.சிதையா நெஞ்சு கொள்! (சிறுகதை)

136. சிதையா நெஞ்சு கொள் ! (சிறுகதை) (தேன் சிட்டு தீபாவளி மலர் 2023) அ ரசுயர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ‘இ ’ பிரிவு வருகைப் பதிவேட்டில் முருகேசன் பெயர் இருக்கிறது. அவனோ ‘ ஐவரின் கரந்துறை வாழ்க்கை ’ ப் போல, மறைந்து மறைந்து வாழ்ந்தான். பள்ளி ஆசிரியர்கள், ‘சர்வ சிட்ச அபியான் ’ என்ற மத்திய அரசின் கல்வித் துறை அலுவலர்கள், கூடப்படிக்கும் மாணவர்கள்..., யார்க்கண்ணில் பட்டாலும் பள்ளிக்கூடத்துக்குக் கொத்திக்கொண்டுப் போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் அறவேக் கசந்தது அவனுக்கு. பகல் முழுதும் வீட்டுக்குள்ளேத், தன் பணிப்பட்டரைக்குள்ளேயேக் கனவுகளோடும், கற்பனைகளோடும் கழித்தான். கொரோனா நேரத்தில், எல்லா மாணவர்களுக்கும் அத்தியாவசியமாகவிருந்த கைப்பேசி, இப்போது முருகேசனுக்கு முதுகெலும்பாய் ஆகிப்போனது. ‘யூ டியூப் ’ என்ற செயலியில் தொழில் கற்றான்; உலகின் பல்வேறு பகுதிகளில், மண் பானைகள், பீங்கான் பானைகள் வனையும் முறைகளைச் சுவாரசியமாகப் பார்த்துக் பார்த்துச் செய்துப் பழகினான். ‘நாமும் இதுபோல வித்தியாசமான வடிவங்களில் பானைகளும், பாத்திரங்களும் வனையவேண்டுமென்றத் தீராதத்தாகமும், ஆவலும...