167. போதையில்லாப் புத்தாண்டு (விகடன்)
.jpg)
167. போதையில்லாப் புத்தாண்டு (புத்தாண்டு 2025 - க்கான சிறப்புச் சிறுகதை)-ஜூனியர்தேஜ் అఅఅఅఅఅఅఅఅ “அந்த அயல் நாட்டுக் கம்பெனியின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் போது வேலை இழந்த மணிவண்ணன், மனச்சோர்வுக்கு ஆளாகி, மதுப்பிரியர்களிடம் மயங்கி, மனம் போன போக்கில் போய்விட்ட ஏழு வருடங்களாக, ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும், “இன்னிலேர்ந்து குடியை விட்றுவேன்..” என்று, நள்ளிரவு 12 மணிக்குச் சத்தியம் செய்து விட்டுப் பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் செய்தச் சத்தியத்தைப் பொய்யாக்கிவிட்டுக் குடிகார நண்பர்களைத் தேடிப் போய்விடும் அப்பாவை இந்தப் புத்தாண்டிலாவது மாற்றியேத் தீர வேண்டும் என்ற வைராக்கியம்ம் எழுந்தது மகேஷிடம். தன் தந்தை ஒரு குடிகாரன் என்பதை, யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதுவும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்ட, பதின்ம வயது மகனால் எப்படி இந்த அவலநிலையை ஏற்றுக் கொண்டுச் சாதாரணமாக இருக்க முடியும்..? விடிகாலை முதல் முன்னிரவு வரை பல வீடுகளில் பற்றுப் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு கழுவி விடுதல், மாப் போடுதல், மாடித் தோட்டம் பராமரித்தல், இப்படியாக கிடைத்த வேல...