80. பெஸண்ட் நகர் க்ரீமடோரியம் (சிறுகதை)
பெஸண்ட் நகர் க்ரீமடோரியம் (சிறுகதை) ஆனந்த விகடன் 22.07.2022 - ஜூனியர் தேஜ் நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம்; விடிஞ்சா, உங்களுக்குப் பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’ பட்டத்தை இணைக்கறக் கடைசீப் படி. விதி யாரை விட்டது! நட்டநடுக் கூடத்துல, உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா.. அவர்களை மாதிரி, உங்களையும் தெற்கே தலை போட்டுக் கிடத்தற மாதிரி ஆயிருச்சே.! *** ‘ஹலோ மிஸ்டர் பிரேதம்.. கண்ணாடி ஐஸ் பெட்டிக்குள்ளே, ‘ஜில்ஜில் ’ லுன்னு இருக்கீங்க. தலைமாட்டுல நல்லெண்ணெய் சீசா, தீப்பெட்டி, பத்தி பாக்கெட் எல்லாத்துக்கும் நடுவுல காமாட்சி விளக்கு காடாவிளக்கு மாதிரி திகுதிகுன்னு எரியுது.. வாழைக் கட்டைலக் கத்தையாய்க் கொளுத்திச் செருகின ஊதுபத்திப் புகைச...