கலியன் மதவு (அத்தியாயம் 15)
கலியன் மதவு (சமூக நாவல்) - ஜூனியர் தேஜ் அத்தியாயம் – 15 ஆனந்த விகடன் 09.08.2022 *********************** “ மா தய்யாவின் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு , மூச்சுக் காற்றில் ஏறி இறங்கும் அவரின் மார்புக்கூடு ஒன்றே சாட்சியாக இருந்தது. நாளின் பாதி நேரம் , சில நாட்களில் முக்கால்வாசி நேரம் மாதய்யா வீட்டிலேயேதான் இருந்தார் , டாக்டர் அருணகிரி . தினம் தினம் விடியற் காலையில் அந்தனூர் வந்துவிடுவார் . பகல் பத்து மணி அளவில் ஜீவபுரம் புறப்படுவார் . கலியன் அவரை வண்டியில் அழைத்துச் செல்வான் . க்னீனிக்கில் அவருடைய வாடிக்கை நோயாளிகளைக் கவனிப்பார் . மதிய ஆகாரம் முடித்துக்கொண்டு ஒரு மணிக்கு வந்தாரானால் ஆறு மணி வரை மாதய்யா வீட்டில் . அடுத்த ரவுண்டு ஜீவபுரம் செல்வார் . பேஷண்டுகளுக்குக் , கன்ஸல்டேஷன் , சிகிச்சைகள் எல்லாம் முடிந்து இரவு ஒரு விசிட் அந்தனூர் வருவார் . அபூர்வமா...