66. கோச் (ஒரு பக்கக் கதை)

66. கோச்

                    -ஜூனியர் தேஜ்

கதிர்ஸ் – (1-15 மே 2022)

     'ஷார்ட்ஸுடன்' தான் செய்யும் உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று  கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள்.

 ‘ச்சீ !  பொறுக்கிப் பயலே, என் புருஷனிடம் சொல்லி உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு..!'  கருவிக் கொண்டே ஹரிணி கீழே இறங்கி வந்தபோது காலிங்பெல் ஒலித்தது .

 ‘யாராக இருக்கம் யோசித்தபடியே திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி. 

 மொட்டை மாடியில் பார்த்த அதே முகம், இப்போது எதிரில், மிக அருகில்.

 "மேடம்.. என் பெயர் ஹரன். எதிர் வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம் ஆகுது." 

 " ....." பதில் பேசாமல் 'சுள்' என முகத்தை வைத்துக்கொண்டு, மௌனம் காத்தாள் ஹரிணி.

 "மேடம்...! ஒரு வாரமா உங்க உடற்பயிற்சியை பார்த்துப் பார்த்து , தானும் செய்யணும்னு ஆசை படுறா என் மனைவி. அவளுக்கு நீங்க முறையா உடற்பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுத் தர முடியுமா ?.." ஹரன் இயல்பாகக் கேட்க, பின்னாலிருந்த ஹரிணி முன்னே வந்து கைகூப்பிளாள்.

 'உடற்பயிற்சிக் கோச்'சாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்ட ஹரிணி  ,  அவர்களை "உள்ளே வாங்க!!" என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

*******************************



Comments

  1. எதிர்பாரா முடிவு!

    ஆனால், கதையின் தலைப்பு, அந்த சஸ்பென்ஸை முன்கூட்டியே ஊகம் செய்ய வைத்து விடுகிறதே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை