87. கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும் (உருவகக் கதை)
87. கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும் ( உருவகக் கதை ) - ஜூனியர் தேஜ் ( ஆனந்த விகடன் – 30.10.2022 ) ஒ ரு எழுத்தாளன் , டைப்ரைட்டர் முன் உட்கார்ந்தான். “ எழுத்தாளரே..என்ன சேதி... ? ” கேட்டது கம்ப்யூட்டர் “ நல்ல சேதிதான். ” என்று தொடங்கி உரையாடல் தொடர்ந்தது . “ அதிசயமா என் பக்கத்துல வந்து ஒக்காந்துக்கறீங்களே...! காரணம் இல்லாம வரமாட்டீங்களே நீங்க ’ னு கேட்டேன்...! ” வெளிப்படையாய்க் கேட்டது . “ உன் கூடப் பேசத்தான் வந்தேன். ” “ என்னை ஓரங்கட்டி ரொம்பநாள் ஆனாலும் , ஞாபகம் வெச்சிக்கிட்டு , என்கிட்டே பேசணும்னு வந்தீங்களே...! ரொம்ப சந்தோஷம்...! ” “... ... ... ... ... ... ” “ பேச வந்துட்டு சும்மா ஒக்காந்திருந்தா எப்படி ? என்ன பேசணுமோப் பேசுங்க...! ” காதைத் தீட்டிக் காத்திருந்தது டைப்ரைட்டர் . “ உன்னண்ட வர எனக்கு நேரமே இல்லை டைப்ரைட்டரே... ” “ அதான் தெரியுமே ... சுத்தி ...