149 சிறிய பெருந்தகைகள் (சிறுகதை)
149. சிறிய பெருந்தகைகள் (பரிசு பெற்ற சிறுகதை) -ஜூனியர் தேஜ் ( கொலுசு – ஜூன் - 2024) “ஜ னனி...” “ம்...!” “வா..........ங்...கறேன்ல...!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ... வந்தேன்...!” – என்று மயூரியின் அருகில் வந்தாள் ஜனனி. அழைத்தபோது மயூரியிடம் இருந்த அவசரம் சற்றே மங்கியது, நாம் செய்வது சரிதானா?, என ஒரு கன யோசிப்பில் சுருக்கிக் கொண்ட முக ரேகைகள், சரிதான், என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் இயல்பானது. “அவசரமா அழைச்சிட்டு, என்னடீ யோசனை மயூரி..?”- ஜனனி இயல்பாகக் கேட்டாள். *** ஒ ளிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை ஜனனியின் கையில் திணித்தாள் – “இதப்பாரு…!” – என்று அவசரப்படுத்தினாள். கைப்பேசியில் இருந்த நிழற்படத்தை இயல்பாகப் நோக்கிய, ஜனனியின் பார்வைச், சடாடெனத் தீவிரமானது. ‘அம்மா, அம்மாவேதான்...!” உள்ளே ஒலித்தது. பெரு மற்றும் ஆள்காட்டி விர...