151. பிற்பகல் (சிறுகதை)

151. பிற்பகல் (சிறுகதை). வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப் போகும் மாணவர்கள் தன்னைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தைப் பெறவேண்டும், என்ற எண்ணத்தில், கையில் புத்தகம், பாடக்குறிப்பேடு போன்றவைகளைக் கொண்டு செல்வார்கள். புன்னகையோடு மாணவர்கள் முன் பேசுவார்கள். ஒரு சில ஆசிரியர்கள் கையில் பிரம்போடும், முகத்தில் இறுக்கத்தோடும் சென்று, முதல் பார்வையிலேயே மாணவர்களுக்கு பய உணர்வைத் தூண்டிவிடுவார்கள். ஆனால் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வித்தியாசமானவர். “எந்த விதத்தில் வித்தியாசமானவர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன். நவநீதகிருஷ்ணன் சார், ஒரு பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டுதான் வகுப்புக்குப் போவார். மேஜையில் அந்தக் குவளையை வைப்பார். புன்னகையும் இல்லாமல், இறுக்கமும் இல்லாமல் மையமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார். நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்களில் ஒருவரேனும் முதல் பிரிவேளை முடிவதற்குள், எழுந்து நின...