169. புகைச்சல் - விகடன் - 24.01.25

169. புகைச்சல் - சிறுகதை விகடன் - 24.01.25 விடிந்தால் போகிப் பண்டிகை. பொதுப் பணிகளையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கவுன்சிலர் கதிரேசன். வழக்கமாக, “தாத்தா..!” என்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சும் பேத்தி சிந்து, இன்று கதிரேசனின் எதிரில் வரவில்லை. ``காபி கொண்டாரட்டுங்களா..?” என்று கேட்டுக் கொண்டே வரும் மருமகளையும் காணோம். ‘ஒரு வேளை பேத்தி இன்னும் பள்ளிக்கூடம் விட்டு வரவில்லையோ..?’ என்று ஒரு கனம் யோசித்தார். சிந்துவின் காலணிகள் ஹாலில் இருந்தததைப் பார்த்ததும், பேத்தி வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார் கதிரேசன். ‘பேத்தி ஏன் வரலை..? உடம்புக்கு ஏதும் சரியில்லையோ..?’ என்று கவலைப்பட்டார். ஹாலில் இருந்து எழுந்து சென்று, சிந்துவின் அறையை அடைந்தார். சிந்து இவர் முகத்தைப் பார்க்காமல் வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். மருமகளும் இவரைப் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள். “என்னாச்சு சிந்து..? ஏன் தாத்தாகிட்டே பேச மாட்டேங்கிறே..?” ஆதங்கத்துடனும் பரபரப்புடனும் கேட்டார் கதிரேசன். “சிந்து உங்ககிட்டேப் பேசவே மாட்டாளாம். என்னையும் உங்ககிட்டே பேச...