Posts

Showing posts from April, 2025

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

Image
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்   திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா , இலங்கை , பிரித்தானியா , மலேசியா , பிரான்ஸ் , ஜெர்மனி , டென்மார்க் , அவுஸ்ரேலியா , கனடா , அமெரிக்கா ஆகிய  நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன.  எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன.  ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி , அவற்றுக்குப் பரிசுகள்  கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு) ,  ஆய்வாளர் முனைவர்   வாசுகி நகுலராஜா (கனடா) ,  ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா) ,  எழுத்தாளர்   கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா)  பணியாற் றினார்கள்.  இவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக. முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம் , வவுனியா , இலங்கை. இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா , தேனி , தமிழ்நாடு. மூன...

170. கூண்டுக் கிளி (தினமணி கதிர்)(06.04.25)

Image
170. கூண்டுக் கிளி ( சிறுகதை )                       - ஜூனியர் தேஜ் (தினமணி கதிர் - 06.04.25)   “ அ ம்மாவுக்கு நல்லகாலம்தான் ...! ” வழக்கமான மெஸ்மரிசக் குரலைக் காதில் வாங்கியபடியே ஜன்னல் கதவுகளை விரியத் திறந்தாள் அகல்யா . ஜன்னலுக்கு வெளியே, கிழிசல் துணிகள், பீத்தல் சாக்குகள், தேங்காய் நார்கள், இறுதி யாத்திரையின்போது விசிறப்பட்டுக் காய்ந்த மாலைகள், நசுங்கிச் சிதைந்த வாட்டர் பாட்டில்கள், விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் நெகிழிப்பைக் கிழிசல்கள், தலைமுடிகள், வாழையிலைச் சருகுகள், எதிர் சாரியில் வளர்ந்து நிற்கும் மரம் அவ்வப்போது உதிர்க்கும் பழுப்புகள் என என்னென்னவோ ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டு, சிக்கிச் சின்னா பின்னமாகி சிதறிக் கிடக்கும் கருங்கல் ஜல்லிகளோடு, குண்டும் குழியுமாகக் கிடந்த,   பராமரிப்பற்றப் பத்தடிச் சாலையைப் பார்த்தாள். திறந்த ஜன்னல் வழியாக வெளிச்சம் உள்ளேப் புகுந்து அகல்யாவின் முகத்தில் பட்டு அறையினுள்ளேயும் பரவியது. “ஜன்னலைத் திறக்காதேடீ புழுதி உள்ளே வந்துடும்..." என்று அம்மா சொல்வதும்...; “...