Posts

Showing posts from November, 2025

177. ஆண்மை தவறேல் (தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)

Image
  177. ஆண்மை தவறேல் (தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)         செ ன்னை விமான நிலையம். வரவேற்பு வளாகக் காத்திருப்போர் கூட்டத்தில் பாண்டியனும் நின்றிருந்தான். அவன் கையில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் ‘பூங்குன்றன்’ என்று எழுதப்பட்ட வரவேற்பு அட்டை பளபளத்தது. சிறிய முதுகுப் பை மட்டுமே இருந்ததால், விமான நிலையச் சோதனைச் சரகத்தில் நுழைந்து, வெகு விரைவில் வெளியே வந்துவிட்டான்.   முகத்தில் செயற்கை மலச்சியோடு, பூங்குன்றனை உதட்டால் வாழ்த்தி, தொன் மரபாய் அணைத்து,   வாகன நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றான் பாண்டியன். குளிரூட்டப்பட்ட உயர்தரமான காரை நெருங்கினர் இருவரும். “நான் ஓட்டட்டுமா காரை ?” இயல்பாய்க் கேட்டான் பூங்குன்றன். “வேண்டாம் வேண்டாம். நீ தொழிலதிபர்.   உனக்குக் காரோட்டி நான்..” என்றான் பாண்டியன், முகத்தில் செயற்கையான முறுவலைப் பூசிக்கொண்டு. “காரோட்டி என்றெல்லாம் சொல்லாதே. நீ என் உயிர் நண்பன்.” உண்மையான முறுவலோடு சொன்னான் பூங்குன்றன். அ ந்தப் பெரிய நட்சத்திர விடுதியின் முன் மோட்டாரை நிறுத்தினான் பாண்டியன். “எதற்கு விடுதி? நேராக இல்லத்திற்கே ப...