ஜனனி ஜெயம் நீ...! - ஜூனியர் தேஜ்
ஜனனி...! ஜெயம் நீ...!! நாவல் சுருக்கம் – .ஆட்டிசம் குறைபாட்டின் ஒரு வகையான "லிட்டில் ப்ரொஃபஸர் சிண்ட்ரோம்” அதாவது (சிறிய பேராசிரியர் குறைபாட்டால்) குழந்தைப் பருவத்திலேயே பாதிக்கப்பட்டவள் ஜனனி. பற்பல சமுதாயக் குறுக்கீடுகளையும், இடையூறுகளையும், அழுத்தங்களையும், தடைகளையும் கடந்து, தியாகத் தாயின் வைராக்யத்தாலும், நேர்த்தியான வளர்ப்பு முறையாலும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல்களாலும், சில பல தூய நட்புகளாலும் மற்றும் எத்தனை எத்தனையோ நல்லுங்களின் பாசத்தாலும், நேசத்தாலும், உலகே போற்றும் வேளாண் விஞ்ஞானியாக உருவாகிறாள் ஜனனி. எக்காலத்திலும் உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பயிர் குறித்து ஆராய்ச்சி செய்து, எந்த நாட்டிலும், எந்தச் சூழலிலும் குறைந்த நாட்களில் விளையும் வகையில் வீரிய ஒட்டு ரக நெற்பயிரை உற்பத்தி செய்து, அதை உலகுக்கு அர்ப்பணித்த ஜனனியை உலகமே போற்றிப் புகழ்ந்து விருதுகள் அளித்துக் கொண்டாடி மகிழ்ந்தன. ஜனனிக்கு தொடக்கக் கல்வி அளித்த சிறுகுடி கிராமத்து அரசுப் பள்ளி வளாகத்தில் அரசுக் கல்வித்துறை...