கலியன் மதவு அத்யாயம் 17 மற்றும் 16 விமரிசனம்
கலியன் மதவு/ அத்யாயம் 17 மற்றும்16 க்கான சின்னஞ்சிறு கோபு அவர்களின் விமரிசனம். இந்த வார 'கலியன் மதவு' நாவல் 'பாவம் புஷ்பா...' என்று ஆரம்பித்து, அந்த காலத்தில் நடந்த 'பால்ய விவாகம்' என்ற கொடுமைகளை நெஞ்சம் பதற வைக்குமளவுக்கு சம்பவம் சம்பவமாக சொல்லி, கண்கலங்க வைத்துவிட்டார் ஜூனியர் தேஜ். என்ன கொடுமையிது என்று மனம் இன்னும்கூட அந்த கொடுமைகளை நினைத்து பதறுகிறது. அந்த பிஞ்சு நெஞ்சங்களின் பரிதவிப்புகள் சோகத்தின் உச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் தனது வாழ்க்கையில் முறியடித்து வந்துவிட்ட குந்தலாம்பாளை பாராட்டமலிருக்க முடியவில்லை. இதுவரை இந்த நாவலை படிக்காதவர்கள்கூட இந்த 17-ம் அத்தியாயத்தை மட்டும் படித்தாலே போதும். அது அவர்களுக்கு அந்தகால பால்யவிவாக கொடுமைகளைப்பற்றி ஆமிரமாயிரம் சோக சம்பவங்கள, கண்களால் பார்த்த ஒரு துயர அனுபவத்தை தந்து சிந்திக்க வைக்கும். இது ஒரு மிகசிறப்பான நாவல். -சின்னஞ்சிறுகோபு . 💐 நான் இப்போது தொடர்ந்து விரும்பி ஆர்வத்துடன் படிப்பது 'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் சாரின் சமூகநாவலைதான். இந்த நாவலில் மாதய்யாவே இறந்தபிறகு என் மனதில் ஒரு சோகமும் வெ...