கலியன் மதவு அத்யாயம் 17 மற்றும் 16 விமரிசனம்



 
கலியன் மதவு/
அத்யாயம் 17 மற்றும்16 க்கான சின்னஞ்சிறு கோபு அவர்களின் விமரிசனம்.

இந்த வார 'கலியன் மதவு' நாவல் 'பாவம் புஷ்பா...' என்று ஆரம்பித்து, அந்த காலத்தில் நடந்த 'பால்ய விவாகம்' என்ற கொடுமைகளை நெஞ்சம் பதற வைக்குமளவுக்கு சம்பவம் சம்பவமாக சொல்லி, கண்கலங்க வைத்துவிட்டார் ஜூனியர் தேஜ். என்ன கொடுமையிது என்று மனம் இன்னும்கூட அந்த கொடுமைகளை நினைத்து பதறுகிறது. அந்த பிஞ்சு நெஞ்சங்களின் பரிதவிப்புகள் சோகத்தின் உச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் தனது வாழ்க்கையில் முறியடித்து வந்துவிட்ட குந்தலாம்பாளை பாராட்டமலிருக்க முடியவில்லை. இதுவரை இந்த நாவலை படிக்காதவர்கள்கூட இந்த 17-ம் அத்தியாயத்தை மட்டும் படித்தாலே போதும். அது அவர்களுக்கு அந்தகால பால்யவிவாக கொடுமைகளைப்பற்றி ஆமிரமாயிரம் சோக சம்பவங்கள, கண்களால் பார்த்த ஒரு துயர அனுபவத்தை தந்து சிந்திக்க வைக்கும். இது ஒரு மிகசிறப்பான நாவல்.
-சின்னஞ்சிறுகோபு.
💐

நான் இப்போது தொடர்ந்து விரும்பி ஆர்வத்துடன் படிப்பது 'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் சாரின் சமூகநாவலைதான். இந்த நாவலில் மாதய்யாவே இறந்தபிறகு என் மனதில் ஒரு சோகமும் வெறுமையும் சூழ்ந்துக்கொண்டது. 'இனி நடப்பதற்கு என்னதான் இருக்கு' என்று வருத்தத்துடன் படிக்க ஆரம்பித்தேன். குந்தலாம்பாள் இப்படி ரௌத்திரமாக அதிரடியாய் பேச ஆரம்பிப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அப்படியே கதை கண்முன் காட்சியாக விரிந்து, படிக்க படிக்க அந்த நாவலிலே நாமும் கலந்துவிடுகிறோம். உயிரோட்டத்துடன் பல்வேறு மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இந்த நாவல் மிகச் சிறப்பானது. தனித்துவம் மிக்கது.
-சின்னஞ்சிறுகோபு.
💐








1. சின்னஞ்சிறு கோபு
'கலியன் மதவு'  நாவலை விரும்பித் தொடர்ந்து படித்து வரும் நான் இந்தப் 15-வது அத்தியாயத்தைப் படித்துத் திடுக்கிட்டுப்போனேன். மிகவும் வருத்தப்பட்டேன்.

  இந்த நாவலின் கதாநாயகராக வலம் வந்த மாதவய்யாவே இறந்துப் போவார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

  மாதவய்யாவின் மரணம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன் நிகழ்வதுபோல ஒரு பரிதவிப்பு மனதில் ஏற்படுகிறது. மாதவய்யா உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மரணமடைந்து, அதன்பிறகு அந்த கடைசி சடங்குகள் நிகழும் சூழ்நிலை வரை எல்லாமே மறக்கமுடியாதபடி மனதிலேயே நிற்கிறது.

  அதுவும் இந்த நாவலுக்குப் பயன்படுத்தப்படும்  புகைப்படங்களும்; வரையப்படும் ஓவியங்களும் நாவலுக்கு ஒரு அசாத்திய உயிரோட்டத்தைத் தருகிறது.

  சும்மாச் சொல்லக்கூடாது, ஜூனியர் தேஜ் அவர்களின் இந்த நாவலுடன் நானும் கலந்து நிற்கிறேன். பாராட்டுகள் சார்.

-சின்னஞ்சிறுகோபு.

2. நத்தம் சுரேஷ்பாபு 

விரிவானத் தகவல்கள், உதாரணங்களுடன் தொடர் சுவாரஸ்யமாகச் செல்கிறது. கதையின் ஆரம்பம் முதல் உடன் பயணித்த மாதவய்யாவின் மறைவு மனதைக் கனக்கச் செய்கிறது. 
ஓர் ஆலோசனை. கதையின் நடுவே வரும் உதாரணங்களை கொஞ்சம் சுருக்கலாம். அவை கதையின் போக்கை மாற்றிவிடுகிறது. 
இந்த அத்தியாயத்தில் பூக்காரர் பற்றிய தகவல்கள் மற்றும் மரங்கள் தோப்புக்கள் பற்றிய தகவல்கள் எனக்கு அதிகமாகப் பட்டது. 
நன்றி வாழ்த்துகள்
நத்தம் சுரேஷ் பாபு








14அத்தியாயம்  3 விமரிசனங்கள் 

'கலியன் மதவு' நாவலைப் படிக்கும்போது, நானும் நம்ம மாதய்யா கூடவே சுற்றி வருகிறேன்.

 அவர் எல்லையம்மன் கோயில் கோபுரத்தின் மீது களையாக வளர்ந்திருக்கும் அரசஞ்செடிகளைப் பிடுங்க ஆரம்பித்ததிலிருந்து, அந்த கோயில் திமிதி விழா முடியும்வரை, அந்த கிராமவாசிகளையும்,  அந்த பத்துநாட்கள் திருவிழாவையும் அப்படியே கண்முன் பார்க்க முடிந்தது.

 இப்படியெல்லாம் எழுதுவதற்கு எழுத்துத் திறமை மட்டுமல்ல, இதைப்போன்ற நிகழ்ச்சிகளை கூர்ந்துப் பார்த்து, அறிந்து, உணர்ந்தத் தெளிவும் வேண்டும். 

அது நம்ம ஜூனியர் தேஜ் சாரிடம் இருப்பதே, இந்த நாவலின் சிறப்புக்கு முக்கியமான காரணம்.

  இன்னொரு விஷயம் இந்தத் தொடர் நாவலில் இடம்பெறும் புகைப்படமும் ஓவியமும் கலந்த வண்ணக் கலவையான சித்திரங்கள். 

அவை அபார அழகு. 

 இது நாவலுக்கு ஒரு தன்னிகரற்றத் தனியழகைத் தருகிறது.

 எல்லாவகையிலும் பாராட்டும்படி அற்புதம் செய்கிறார் ஜூனியர் தேஜ் சார்!
-சின்னஞ்சிறுகோபு.

2. திருநாவுக்கரசு, சீர்காழி
மாதய்யா மறுபடியும் வரணும்🙏🏻
அந்த எல்லயம்மன்தான் காப்பத்துணும்🙏🏻நல்லவன் வாழ்வான் ..அவன் குடும்பம் கஷ்டபடகூடாது🙏🏻
பத்துநாள் முன்னாடியும் பத்துநாள் திருவிழாவும் நல்ல தூக்கமில்லாத்தும் அவர் ஆரோக்கியத்தை சற்று பாதித்ததோ..

மாதய்யா விரைவில் நலம்பெற வேண்டுவோம்🙏🏻
அருமை !அழகுநடை!வழக்கம்போல சூப்ப்பர்👌🏻🤝💐💐

பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளிரும்போது போது கூடவே, வரும் மண்ணெண்ணை வாசனை கூட எனக்கு வந்தது சார்.😜😃😃😃👍🏻

3. நத்தம் சுரேஷ்பாபு
10 முதல் 14ம் அத்தியாயம் வரை வாசித்தேன்! ஒவ்வொரு அத்தியாயமும் மிகச்சிறப்பு! குறிப்பாக அந்தகாலத்தில் தானியம் சேமிக்கப் பயன்படுத்திய குதிர் போன்றவை குறித்து விவரித்ததும் மிகவும் சிறப்பு. 14ம் அத்தியாயத்தில் 10 நாள் திருவிழா விவரணை மிகவும் அழகாக இருந்தது. மிகச்சிறப்பானதொரு நாவல்! வாழ்த்துகள் சார்.

**************************************


அத்தியாயம் 13
         ' கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் அவர்களின் சமூகநாவலை நான் விரும்பிப் படித்துக் கொண்டிருக்கிறேன். 

        ஒவ்வொரு அத்தியாயமும் உண்மையைப் போல காட்சியாகக் கண் எதிரே ஓடிக்கொண்டிருக்கிறது.

         பூசரக் களத்திற்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கும் இந்த 13-ம் அத்தியாயம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது.

  பூமிநாத உடையாரைப் பற்றியும், அவர் வாழ்ந்த வாழ்வாங்கு வாழ்க்கைப் பற்றியும் படிக்கும்போதே ஒருவித வியப்பும், ஆச்சரியமும் ஏற்படுகிறது.
 
        அவரது வாழ்க்கையில் நுழைந்த அந்த கருப்பழகி முனியம்மாள் என் முன்னும் நடமாடுகிறாள்.

  அதோடு உடையார் காளவாய் தொழிலுக்கு வந்தவிதம், அவரது திறமையான சமயோசிதச் செயலை உணர்த்தி அசர வைக்கிறது. 
        அந்த இடம் எப்படித் தாமரைக்குளமாக மாறியது என்ற தகவலும் சுவையாக இருக்கிறது.

      எழுத்தும் ஓவியமும் போட்டிப்போட்டுக்கொண்டு மனதை கவரும் இந்த சமூகநாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு குறிப்பிடதக்க அற்புதமாகும்.

சின்னஞ்சிறுகோபு

அத்தியாயம் 12
'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜின் அழகோவியமான கிராமத்து நாவலின் 12-ம் அத்தியாயத்தை இன்று படித்தேன்.

  நான் இப்படி ஒரு தன்னிகரற்ற நாவலை சமீபத்தில் படித்ததில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால், இது ஒரு அழகான கிராமத்து ஓவியம்.

  இது மர்மநாவல்கள் போல அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்று மனதில் பரபரப்பு ஏற்படுத்தும் நாவல் அல்ல. ஆனாலும் கலியன் மதவு என்ற இந்த நாவலை படிக்க படிக்க நாமும் அவர்களுடன் அந்த சூழ்நிலையிலேயே வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

  மாதய்யாவையும் அவர் குடும்பத்தையும் மையமாகக்கொண்டு சுற்றிவரும் இந்த நாவலின் அமைப்பே ஒரு தனியழகு. குந்தலாம்பாளுக்கும் துரைராமனுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகள், ஏதோ நாமும் அந்த வீட்டில் மோகனாவுக்கு அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததை போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

  கிட்டா என்ற கிருஷ்ணசாமியை சந்திக்கும்போது, 'அட, இவனைப்போன்ற எத்தர்களை நம்ம ஊரிலேயே பார்த்திருக்கிறோமே'  என்று தோன்றுகிறது. அதுவும் அவன் மாட்டு தரகில் செய்யும் கில்லாடி வேலைகள் தலையை கிறுகிறுக்க வைக்கிறது. இவனைப் போன்ற எத்தர்களிடம் மாட்டினால் தப்பிப்பது இயலாத காரியம்.

  சும்மா சொல்லக்கூடாது, கலியன் மதவு நாவலின் ஒல்வொரு அத்தியாமும் கிராமத்து காற்றாக மனதில் சலசலத்துப் போகிறது. பாராட்டுகள் சார்.

-சின்னஞ்சிறுகோபு
*அன்புடன்...*

  ஜூனியர் தேஜ் சார், 'கலியன் மதவு' என்ற தொடர்கதையை எழுதிவருகிறார். இந்த சமூக தொடர்கதை ஒரு ஐம்பது வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. அவர் கதை சொல்லும்பாணி, மனதில் அப்படியே காட்சிகளாக படம்போல ஓடி, நாமும் அந்தந்த இடங்களில் அவர்களுடன் வாழ்வதை போலவே இருக்கிறது.

  இப்போது இந்த நாவலின் 11-வது அத்தியாயத்தை படித்தபோது, ஒரு பள்ளிக்கூட சிறுவனாக, அந்த கால திருச்சி நகரத்தில் அலைந்து திரிவதைப்போல இருந்தது. அதுபோல ஒரு பழைய அந்தகால ஓட்டுவீட்டை நானேகிட்டேயிருந்து பழுதுப்பார்ப்பதைப்போன்ற அனுபவமும், காலில் அடிப்பட்டு கைவைத்தியம் பலிக்காமல் டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்ததைப் போன்ற உணர்வும் ஏற்பட்டது.ஏதோ 1960 காலக்கட்ட சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் ஒரு நல்ல சமூகக்கதையை படிப்பதைப்போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
  பாராட்டுகள் சார்



பரணி, என்கிற விஜய காமேஸ்வரி,சென்னை

அந்தக் கூடத்தில் நானும் நிற்பதுபோலத் தோன்றுகிறது


முகமது நிஜாமுதீன் எழுத்தாளர் பாங்காங்

சார் வணக்கம் சார் 
உங்களுடைய கலியன் மதவு தொடர்கதையை தொடர் நாவல் தொடர்ந்து படிக்கணுமே அப்படின்னு  கொஞ்சம் அலுப்பு பட்டேன். 

அப்புறம் ஓர் ஆர்வத்துல படிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்து படித்தேன். முதல் பகுதி படிச்சிட்டேன். 

இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதிகளைப் படிக்கிறேன் சார்! 👌
************

திரு சம்பத் குமார் முதுகலை தமிழாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சீர்காழி


எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன் சார்.ஒவ்வொரு அத்தியாயமும் மிகச்சிறப்பு...வார்த்தைகளும்,வர்ணனைகளும் நெஞ்சை அள்ளுகின்றன.நிறைய செய்திகளும் கிடைக்கிறது சார்...நன்றி

(நடையில் நின்றுயர் நாயகன்)நீர்



கலியன் மதவு நாவல் படித்து விமரிசனம் செய்த பெருந்தகைகள்

1.   திரு சின்னஞ்சிறு கோபு அவர்கள்.           மூத்த எழுத்தாளர்தமிழ்நாடு.

2.   திரு ஹரிகோபி அவர்கள்,                                  மத்திய ஆயுத காவல்படையிலிருந்து ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி,

புதுடெல்லி

3.   திரு நத்தம் சுரேஷ்பாபு அவர்கள்

எழுத்தாளர்

4.   திரு மயிலாடுதுறை ராஜசேகர் அவர்கள்

எழுத்தாளர்.

5.   திருமதி ஜெயந்தி ஸ்ரீனிவாசன் அவர்கள்,                            

ஓய்வு வெற்ற யூனியன் வங்கி அதிகாரி.

6.   திரு ரா செந்தில்குமார் அவர்கள்,                              

முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்

பள்ளிசீர்காழி

7.   திரு காசி இளங்கோவன்,                      

முதுகலை வரலாற்று ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

8.   திரு பி. புலவேந்திரன் அவர்கள்,                           

முதுகலைத் தமிழ் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

9.   திரு தி. சீனிவாசன் அவர்கள்,                             

இடைநிலை ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி  

10. திரு ஆர். வெங்கடேசன் அவர்கள்,

பட்டதாரி ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்பள்ளி, சீர்காழி.

11. திரு ஆர். ரமேஷ் அவர்கள்,                                  

பட்டதாரிக் கணித  ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி

 சீர்காழி                   

12. திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள்                

பட்டதாரி அறிவியல் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

13. திருமதி சு.சகுந்தலா அவர்கள்

என் சகோதரி, பழூர், திருச்சி மாவட்டம்.

14. திருமதி நீலா ராமரத்தினம் அவர்கள்

(என் அத்தை ), சென்னை

15. திரு ஜி சுந்தர்ராஜன்,

முதுகலை ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

16. திரு சுவாமிநாதன் , எழுத்தாளர், சென்னை  

17.திரு லெ.பிரதீப் அவர்கள், முதுகலைக் கணித ஆசிரியர், 

ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

18. திரு என்.ஏ.சண்முகம் அவர்கள், பட்டதாரிக் கணித ஆசிரியர், 

ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி


19. திருநாவுக்கரசு.சு, கட்டடப் பொறியாளர் , சீர்காழி.

 


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 1.   திரு சின்னஞ்சிறு கோபு அவர்கள். மூத்த எழுத்தாளர்தமிழ்நாடு.

 எனது பார்வையில்... ஜூனியர் தேஜ்ன் கலியன் மதவு

நமது நண்பர் ‘ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதும் 'கலியன் மதவுஎன்ற தொடர்கதையை நமது அமைப்பில் எத்தனைபேர் படிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாதுஆனால் படிக்க ஆரம்பித்தால் நீங்கள் ஒரு   தமிழக கிராமத்திற்குச் சென்று அங்கேயே வாழ்ந்து வருவதைப் போன்ற ஒரு உணர்வை நிச்சயம் பெறுவீர்கள்மிகவும் நுணுக்கமான எழுத்துகதாபாத்திரங்களை கண்முன் அப்படியே உலாவவிடும் தன்னிகரற்ற எழுத்து.

             கிராமத்து மண்ணின் மணம் அப்படியே இந்த நாவலில் இருக்கிறதுவயல்வெளிகள்விவசாயம்விவசாயம் சார்ந்த காளவா போன்ற தொழில்கள்தெருக்கள்வீடுகள்,மாடு கன்றுகள்சிறுவர்களின் விளையாட்டுகள்அவர்களின் மன உணர்வுகள் என்று ஜூனியர் தேஜ் அசத்துகிறார்.

 ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இப்படியெல்லாம் எழுதமுடியாதுஇப்படி ஒரு கிராமத்தின் அழகியலை அப்படியே கொண்டுவரும் நாவல் எதையும் நான் சமீபகாலத்தில் படித்ததில்லை.

             இந்த நாவலுக்குப் படங்கள் சேர்ப்பதிலும் ஜூனியர் தேஜ் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்அது இந்த நாவலில் மனம் ஒன்றி திளைப்பதற்கு மேன்மேலும் உதவுகிறது.

             இந்த நாவல் இதுவரை ஆறு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த ஆறு அத்தியாயங்களை படித்ததிலிருந்து நான் அசந்துப்போய் ஆயிரமாயிரம் மலரும் நினைவுகளில் மகிழ்ந்திருக்கிறேன்.                               நீங்களும் நம்ம ஜூனியர் தேஜ்ஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்நாவலை படித்து பாருங்களேன்!

 *-சின்னஞ்சிறுகோபு*

*கலியன் மதவுஅத்தியாயம் *7* படித்தேன்.*ஜூனியர் தேஜ்சார்இந்த அத்தியாயத்தின் அழகும்விறுவிறுப்பும் மனதை அப்படியே அள்ளுகிறதுகாட்சிகளும்அதற்கு தாங்கள் வரைந்திருக்கும் ஓவியங்களும் கண்முன் அப்படியே உண்மைபோலவே விரிந்து நம்மையும் அங்கே கொண்டு செல்கிறதுதங்களுடைய ஆழ்ந்த கூர்மையான அனுபவமும்எழுத்து நடையும் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறதுகதை கொஞ்சம் 'திக் திக்கென்று அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்று மனக்கவலையையும் ஏற்படுத்துகிறது.

*இந்த கதையை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாதுஆனால் இது அனைவரும் படிக்க வேண்டிய அற்புதம் என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்வேன்!*

*-சின்னஞ்சிறுகோபு*

கலியன் மதவு நாவலின் எட்டாவது அத்தியாயத்தைப் படித்துத் திக்பிரமை பிடித்தது போல நிற்கிறேன்அப்படியே காவிரி ஆறு கண்முன் ஓடுகிறதுஇறந்தவர்களின் உடல்கள்அதை எடுத்து வரும் விதம்பிரச்சனைகள் என்று அந்த கிராமமக்கள் உணர்வு பூர்வமாக மனதில் நடமாடுகின்றனர்கதையை சீக்கிரம் முடித்து விடுவீர்களோ என்று தோன்றுகிறதுஅப்படி செய்யாதீர்கள்!           

*-சின்னஞ்சிறுகோபு*

             *ஜூனியர் தேஜ்அவர்களின் *கலியன் மதவுநாவலின் *அத்தியாயம் -9* தை படித்தேன்.

            முத்தனூர் எல்லையில் பிரேதம் மறிக்கப்படுவதுமாதய்யா முத்தனூர் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பிரேதத்தை திருப்பிக்கொண்டுவந்துதனது வயல்வழியாக எடுத்துச் செல்வதுஅதைப்பற்றி அந்தனூர் மக்களின் பேச்சுகள் என்று எல்லாமே கண்முன் நிகழ்ச்சியாக உண்மைபோல் ஓடுகிறது.

             அதுபோல வயல்களில் இரண்டாம் பாட்டம் அறுப்பு வேலைகள் நடக்கும் நிகழ்ச்சிகளை படிக்கும்போதுநாமும் அங்கே அந்த பூவரசு களத்திலிருந்துஅதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல் உணரமுடிகிறதுவயல்வெளி அறுவடைக் காட்சியை இவ்வளவு   உயிரோட்டமாக நான் நேரில் கூட உணர்ந்ததில்லை.

             மாதய்யா வண்டியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துஅவர் காலில் வண்டிச் சக்கரம் ஏறி இறங்கியதை உணரும்போதுமனதில் ஒரு சோகம் கலந்த வலி ஏற்படுகிறது.

             ஐயா, ஜூனியர் தேஜ் சார்நீங்கள் அற்புதம் செய்கிறீர்கள்கலியன் மதவு என்ற தங்களது நாவலின் இந்த 9-ம் அத்தியாயத்தைப் படித்து அசந்துப்போய் நிற்கிறேன்.

*-சின்னஞ்சிறுகோபு*

19 ஜூன் 2022 அன்று தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்
திரு சின்னஞ்சிறு கோபு அவர்கள் எழுதிய 10ம் அத்யாயம் சார்ந்த விமர்சனம்

நான் இப்போது தொடராகப் படித்துவரும் ஒரே நாவல் *கலியன் மதவு* என்ற ஜூனியர் தேஜின் நாவல் மட்டுமே! இந்த நாவலைப் படிக்கும்போது ஏதோ அறுபது எழுபது காலக்கட்டத்தில் கிராமத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

  மாதய்யா காலில் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு இரண்டரை மாதங்களை கடப்பதைப் பார்க்கும்போது, ஏதோ நமக்கே அடிப்பட்டு கால்கட்டுடன் சிரமப்படுவதைப் போன்ற ஒரு வலிகலந்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் விரிவான சிறப்பான விவரிப்பு.

  கணேசப்பிள்ளை மாதய்யாவைப் பார்க்க வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, ஏதோ நாமே கணேசப்பிள்ளையாகவே மாறி வடைப்பாயசத்துடன் சாப்பிடுவது போல இருக்கிறது.

  குந்தலாம்பாள் கை மிஷினில் காப்பிக்கொட்டை அரைக்கும்போது அந்த ஓசையை மட்டுமல்ல; அந்த ஃபீப்ரி காப்பிப்பொடியின் மணத்தையும் உணரமுடிகிறது.

  அதுபோல அறுவடை காட்சிகள், குதிர்கள் பத்தாயங்களெல்லாம் கண்முன் வந்துப்போகின்றன.

  இந்த நாவலில் இடம்பெறும் படங்கள் அதிஅற்புதமாக இருக்கின்றன. படங்கள் நாவலின் உயிரோட்டத்திற்கு சிறப்பாக உதவி செய்கின்றன.

  ஜூனியர் தேஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்கதையை படிப்பவர்கள், ஒரு மறக்கமுடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

*சின்னஞ்சிறுகோபு*


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


 2.   திரு ஹரிகோபி அவர்கள்,

மத்திய ஆயுத காவல்படையிலிருந்து ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி  , புதுடெல்லி

 அத்தியாயம்-1

கலியன் மதவு நாவல் முதல் அத்தியாயமே நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறதுமுதல் அத்தியாயத்தின் ஹைலைட்டான அகிலாண்டக் கிழவியின் ஆளுமையை சிறுசிறு சம்பவங்களால் இணைத்து கண்முன்னே கொண்டு வந்திருப்பதும்வட்டார வழக்கிலேயே கதாபாத்திரங்களை பேச வைத்திருப்பதும் வாசகனை சம்பவ இடத்துக்கே அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்து விடுகிறதுபடித்து முடித்தபின்னும்அந்த கிராம சூழ்நிலையிலிருந்து வெளியே வர வெகு நேரமாகிறதுஇது கதாசிரியரின் வெற்றி

அத்தியாயம்-2

ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம்கன்றுகளும் குழந்தைகள்தான்ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்று நினைப்பவர் அவர். ‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம்கன்றுகளும் குழந்தைகள்தான்ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்ற வரிகளின் மூலம் மாதய்யாவின் தயையும்அவர் வாயில்லா ஜீவன்களையும் தம் மக்கள்  என்றே எண்ணுவது அவரது உயர்ந்த குணத்தையும் எடுத்துக்காட்டுகிறதுகிராமிய நடையிலேயே கதையை நகர்த்துவது படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது

அத்தியாயம்-3

தொப்ளான் என்ற மனிதரை தெய்வ நிலைக்கு உயர்த்திய மாதய்யாவின் சிந்தனைகள் மனதை நெகிழ வைக்கிறதுமரணத்திற்கு பின் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாய சாங்கியங்களை விரிவாகவும் ஊடே பெரும்பாலான கிராமங்களில் இப்போதும் அனுபவித்து வரும் வழிப்பிரச்சினையையும் கண்முன்னே கொண்டு வந்தது

அத்தியாயம்-4

மாதய்யாவின் மனதை உறுத்திக்கொண்டிருந்த புடல்கொல்லை ரகசியத்தின் விடை கிடைத்ததும் முன்பை விட அதிகமாக சஞ்சலம் அடையத் தொடங்கிவிட்டார்

இடையிடையே ஊடாடும் மகனைப் பற்றிய நினைவுகளும் அதை விட அதிகமாக மண்ணின் மகத்துவம் அறியாமல் தொலைதூரத்தில் வேலை செய்யும் மகன் மீது கொண்டுள்ள கோபத்தையும் நன்கு உணரமுடிகிறது.

அத்தியாயம்-5

மாதய்யாவின் மனைவி குந்தாலம்மாவை சிலாகித்து ஒரு லக்ஷ்மிகரமான உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள்மகன் தொலைவில் இருந்தாலும் அவன்மேல் உள்ள பரிவை தனது வாக்குகளாலும்செயல்களாலும் அடிக்கடி  நினைவு கூர்வது தாய்மைக்கே உரிய குணமாகும்

    ராமுவுக்கும் சாவித்திரிக்கும் உண்டான காதலின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் இந்த அத்தியாயத்தில் அலசியிருக்கிறீர்கள்அமரர் தேஜ் அவர்களின் சித்திரங்கள் பிரமைக்க வைப்பதோடல்லாமல் கதைக் களத்தை கண்முன்னை நிழலாடவிடுகிறது  

அத்தியாயம்-6

    ராமு-சாவித்திரி காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததும் நாவல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுஅடுத்து என்ன என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.

 *CONCLUSION*

     கதையின் நடையையும்சம்பவங்களின் சீரான கட்டமைப்பையும் பார்க்கும்போது ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து படிக்கும் சுகம் ஏற்படுகிறது

         க்கிரகாரத்தின் பழக்க வழக்கங்களை மீண்டும் படிக்கும்போது பழைய கால நினைவுகள் கண்முன்னே வந்து போகின்றனகதையின் இடையிடைய காட்டப்படும் ஆங்கில நாவல்களின் மேற்கோள்கள்கதை ஓட்டத்தை குறைப்பதாக எனக்குப் படுகிறதுபடிக்கும் வாசகர்கள் அனைவரும் ஆங்கில நூல்களை படித்திருந்தால் மட்டுமே அதில் லயிக்க முடியும்

         சில விஸ்தாரணமான வர்ணனைகளையும் தவிர்க்கலாம்நான் கூறிய இந்த குறிபுகள் எல்லாம் முதல் சில அத்தியாயங்களில்தான் காணமுடிந்ததுஆறாவது அத்தியாயம் இந்த குறைகள் ஏதுமின்றி To the Pointஆக இருப்பதைப் பார்க்கும்போது இதை நீங்களும் உணர்ந்து அவைகளை களைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

         இந்த நாவல் முடிந்தவுடன் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும்உங்களை சிறந்த நாவலாசிரயராக அடையாளம் காட்டக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நல்ல சமூக நாவல் இதுவாக இருக்கும்.

ஹரிகோபி, புதுடெல்லி

ஜூனியர் தேஜ் சார்,  

ராமுவும் சாவித்திரியும் காவிரியில் மூழ்கினாலும்அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த   அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.

ஹரிகோபி, புதுடெல்லி

***---------------------*************--------------------***

3.திரு நத்தம் சுரேஷ்பாபு அவர்கள்                                                 எழுத்தாளர்

அத்தியாயங்களும் வாசித்தேன்அருமையாக உள்ளதுஅந்தக்கால விளையாட்டுக்கள் விவரிப்புசெங்கல் சூளை பற்றிய விவரிப்புவயல் அறுவடை பற்றிய துல்லியமான விவரிப்புக்கள் பிரமிக்க வைக்கிறது.

      ஆனால் காவிரி பற்றிய விவரிப்பில் கொஞ்சம் நீண்டுவிட்டதுஆங்கில கவிதைகள் பொன்மொழிகளை முழுவதுமாக சொல்லி விவரிக்க வேண்டும் என்பதில்லைஅது கதையை விட்டு வெறெங்கோ நகர்த்திச் சென்றுவிடுகின்றது

  மேலும் காதல் என்றாலே மேல்சாதி கீழ்சாதி , குருக்கள்   என்று எல்லோரும் எழுதுவதையே நீங்களும் எழுதுவது ஏன் என்று புரியவில்லைஒரு வேளை இது உண்மைச் சம்பவத்தை தழுவியிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

நல்லதொரு நாவலாக வளர்ந்து வருகிறது கலியன் மதவு.

வாழ்த்துகள்.

நத்தம் சுரேஷ்பாபு

***---------------------*************--------------------***

 

4.   திரு மயிலாடுதுறை ராஜசேகர் அவர்கள்

எழுத்தாளர்.

             ஜூனியர் தேஜ்சார் வணக்கம்தங்களுடைய கலியன் பதிவு தொடரை என்னால் உடனடியாக படிக்க முடியவில்லை.செல்போன் பெரும்பாலான நேரங்களில் என்னிடம் இருக்கவில்லை.அதற்குள் பலர் படித்து கருத்து பதிவு செய்து விட்டார்கள்சி.சி.கோபு சார் ஜாம்பவான்அவருடைய விமர்சனத்தையும்ஹரிகோபி சார் விமர்சனத்தையும் படித்தேன்சொந்த வேலைகள் காரணமாக இப்போதும் படிக்க முடியவில்லைஆனால் நிச்சயமாகப் படிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.வணக்கம்.  

அன்புடன்                

மயிலாடுதுறை ராஜசேகர்

***---------------------*************--------------------***

 

5.   திருமதி ஜெயந்தி ஸ்ரீனிவாசன் அவர்கள்,                       ஓய்வு வெற்ற யூனியன் வங்கி அதிகாரி.

சார் வணக்கம். மிக அருமையான பதிவு.

 

***---------------------*************--------------------***

6.   திரு ரா செந்தில்குமார் அவர்கள்,                              முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

மிக மிகச் சிறப்பாக நகர்கிறது கலியன் மதவு. ஒவ்வொரு அத்யாயத்திலும் மெச்சூரிட்டி தெரிகிறது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.

 

***---------------------*************--------------------***

7.   திரு காசி இளங்கோவன்,                                                  முதுகலை வரலாற்று ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

கலியன் மதவு ரொம்ப நல்லாப் போவுது.

திரு தி. சீனிவாசன் அவர்கள்,                    இடைநிலை ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

                           

திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள்,                  பட்டதாரி ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

 

 

***---------------------*************--------------------***

8.   திரு ப்பி. புலவேந்திரன் அவர்கள்                     முதுகலைத் தமிழ் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

·         என்னுடைய ஆசிரியரும், வழிகாட்டியுமான திரு அருணாசலய்யா (தேஜ்) அவர்களின் மகனான வரதராஜன் (ஜூனியர் தேஜ்) அவர்களின் கலியன் மதவு நாவல் மிக அருமை.

·         கிராமத்து அத்தியாங்களை கண் முன் ஓவியமாய் நிறுத்துகிறார். படித்துப் படித்து வியக்கிறேன்.

·         பொருத்தமான அவருடைய ஓவியங்களும், அமரர் தேஜ் அவர்களின் ஓவியங்களும், அவர் மகன் ராஜேஷ் அவர்களின் ஓவியங்களும் கண்களையும் மனத்தையும் கவர்கின்றன. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.

·         அனுபவம் அருமையாய்ப் பேசுகிறது. பெருமையாய் இருக்கிறது.

·         கலியன் மதவு அருமையிலும் அருமை

 ***---------------------*************--------------------***

9.   திரு ட்டி.. சீனுவாசன் அவர்கள்,                                    மூத்த இடைநிலை ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

·         மிக நுட்பமான நாவல். சாகித்ய அகாதமிக்கு தேர்வாக வாய்ப்புள்ள நாவல்.

·         மிக அருமையான எழுத்து. More Informative.

***---------------------*************--------------------***

10. திரு ஆர். வெங்கடேசன் அவர்கள்,                              பட்டதாரி ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்பள்ளி, சீர்காழி.

·         Super sir! Congratulations!

·         முதல் இரண்டு  அத்தியாயங்கள் இன்று படித்தேன்அருமைஇன்றைய தலைமுறை தெரிந்து வைத்திராத பல கிராமப்புற வார்த்தைகளை கையாண்டுள்ளீர்கள்சிறப்பு.

11. திரு ஆர். ரமேஷ் அவர்கள்,                                பட்டதாரிக் கணித  ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

·         தொடர்ந்து படிக்கிறேன் சார். ஒரு சில இடங்களை இரண்டு முறை படித்துத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. நுட்பமான எழுத்து. கிராமத்துச் சொலவடைகளை இப்போது மீளப் பார்க்க முடிகிறது சார். வாழ்த்துக்கள் சார்.

              ***---------------------*************--------------------***

12. திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள்,                  பட்டதாரி அறிவியல் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

·         As far as the 9th chapter of Kaliyan Madhavu is concerned, the critical analysis  of the senior writer Mr Chinancheru Gopu’s openion is  100% True sir.

 I also have felt sir.

During my childhood I had enjoyed the harvesting period at my grandfather’s field. Again I have gone on that period when I have read the 9th chapter.

Really I imagined that period.

My sincere wishes sir

C R Vanathi

***---------------------*************--------------------***

13. சு சகுந்தலா, என் சகோதரி

பழூர் திருச்சி மாவட்டம்

·         கலியன் மதவு நாவல் மிக மிக அருமையா இருக்கு. கதையைப் படிக்க ஆரம்பிச்சா பாதீல விட முடியலை. அவ்வளவு அருமை கிராமத்து மணம் மிகவும் அற்புதம். நீ கதையை அனுப்பறதுக்கு ரொம்ப நன்றி.

***---------------------*************--------------------***

14. நீலா ராமரத்னம் 

(என் அத்தை) சென்னை

·                Kaliyan madhavu Nee ezudiya Naval kadalur Ganesan sujatha azavirku  unnai uyarthi vimarsanam oli nadavil anuppiyathai ketten.

 Enakku mika makilchi.

 Un naval ezuthum thiramai menmelum vazarchi adaindhu chinnathirai, velli thirai varai vaipukidaika kadavulai pirarthikiren Varadha

***---------------------*************--------------------***

1.     15. திரு ஜி சுந்தரராஜன் அவர்கள்                                                முதுகலை ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

 ·         Wonderful response from the critic is really appreciable. Writing elevates your position to the next level sir.

***---------------------*************--------------------***

16. திரு சுவாமிநாதன் , எழுத்தாளர், சென்னை

தங்களின் தொடரை முழுமையாய்ப் படிக்க இயலாத சூழலில், படித்தவரைக்கும்,

தெளிந்த நீரோடை நடை...

சிக்கன வார்த்தை...

ஆர்ந்த கருத்து...

செறிவான தகவல்...

எனத் 

தேர்ந்த எழுத்தாளர்க்குரிய

வல்லமை கண்கூடு...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

17.திரு லெ.பிரதீப் அவர்கள், முதுகலைக் கணித ஆசிரியர், 

ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி

 கலியன் மதவு  நாவல் அருமையாக உள்ளது சார். தொடர்ந்து படித்துக்காண்டிருக்கறேன்.   

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹         

18. திரு என்.ஏ.சண்முகம் அவர்கள், பட்டதாரிக் கணித ஆசிரியர், 

ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி 

சார் ... உங்க கலியன் மதவு நாவல் என்னை என் சிறு பிராயத்தில் பார்த்த நிகழ்ச்சிகளை மீண்டும் கண் முன் காட்சியாகப் பார்க்க வைக்கிறது சார்.

குதிர், பத்தாயிரத்தில் நெல் கொட்டிய நாட்கள் நினைவுக்கு வருகிறது சார்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


19. திருநாவுக்கரசு.சு, கட்டடப் பொறியாளர் , சீர்காழி.

 

ஆசிரியருக்கு இனிய வணக்கம்🙏🏻

*கலியன் மதவு* படித்தேன். எழுபதுகளில் பிறந்து இன்று ஐம்பது வயதுகளில் வாழ்பவர்கள் அனைவருக்கும் உங்களுடைய எழுத்து நடையும் கதைக்களமும் நன்கு புரியும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு உணர்வுபூர்வமாக புரிய வேண்டும் என்பதற்கு வர்ணனை காட்சிகள் மூலம் மிகவும் முயன்று இருக்கிறீர்கள். மகிழ்ச்சி!

இந்தக் கதைக்காக தங்களின் மெனக்கெடு நன்றாக புரிகிறது.


மூன்றாவது அத்தியாயத்தில் புடல பந்தல் பற்றி ஆசிரியர் விவரிக்கும்போது எங்கள் தோட்டத்தில் நான் சிறு பிராயத்தில் விளையாடிய போது வரும் புடலை வாசனை நினைவுக்கு வந்தது. அதைக்கூட நுணுக்கமாக சொன்ன ஆசிரியரை வெகுவாக பாராட்டலாம்,என்று நினைத்துக்கொண்டே வாசித்தேன். அருமை இங்கே வாசிக்கும் எத்தனை பேருக்கு அந்த புடலை வாசனையை வந்ததோ தெரியாது ஆனால் எனக்கு வந்தது.


*கலியன் மதவு* ல் கவர்ந்த சில வரிகள் அப்படியே இதோ….


*எப்படா... இவன் தடுக்கி விழுவான், கைக் கொட்டிச் சிரிக்கலாம்’னு காத்திருக்கற ஜனங்களுக்கு நடுவுலதான் நீ தடுக்கி விழுந்துராம எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணணும். அப்படியே தடுக்கி விழுந்துட்டாலும், விழுந்துட்டோமேனு விழுந்தே கிடக்காம பயிற்சி பெற்ற போர் வீரனைப் போல எழுந்து நின்னு வாழ்க்கையோடப் போராடணும். எச்சரிக்கையா இருக்கணும்... எதுக்கும் கலங்காம இருக்கணும்*...


*தன்னைப் புரிந்துகொண்டு இதமாய் சேவகம் செய்யும் சேவகன் கிடைத்துவிட்டால்,*


*எஜமானன் தன்னை இழந்துவிடுகிறான். *


*நாலு மனுஷாளை திருப்திப்படுத்தவேண்டும் என்று இறங்கிவிட்டால், குடும்பம் சீர் குலைகிறது.*


*குடும்பத்தை மட்டும் சீராகவும் சிறப்பாகவும் வைத்திருப்பவன் பொதுவிவகாரத்தில் தலையிடுவதில்லை*.


*பொது வாழ்விலும் சாதித்து, சொந்தக் காரியத்தையும் குறையில்லாமல் வைத்திருப்பது குதிரைக்குக் கொம்பு முளைக்கிற கதைதான்*.


தாங்கள் எழுத்துலகில் நீங்கா இடம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டி வாழ்த்துகிறேன்.

வணக்கம்🙏🏻


திருநாவுக்கரசு.சு

சீர்காழி.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 


பரணி, என்கிற விஜய காமேஸ்வரி,சென்னை

குமரேசனை போலத்தான் நாங்களும் ஊஞ்சல் கனவோடுஉள்ளோம்  கதை அருமை,அதில் காணும் பழூர் ஊஞ்சல், திருவவிசலூர் ஊஞ்சல் சூப்பர்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹






Comments

  1. தொடர்கதையின் அத்தியாயங்களைப் படித்து இரசித்து கருத்துகள் தந்த நட்புக்களின் கருத்துக்களைப் படித்து இரசித்தேன்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)