105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசக
105. மனோபாவ மாறுதலே காக்கும் நம் தரவை! - எச்சரிக்கும் உளவியல் ஆலோசகர்| My Vikatan விகடன் 28.01. 2023 சர்வதேச டேட்டா ப்ரைவஸி தினம் (International Data Privacy Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் தனியுரிமையை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நாளின் பிரதான நோக்கமாகும் . நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி . மொபைல் இன்றி இல்லை உலகு என்பது புதுமொழி . கேஜி முதல் பிஜி படிப்பு வரை ஆன்லைன் கற்றல் கற்பித்தல் மூலம் பிரசித்தமானது கொரோனா கொடுத்த கொடை. அது மட்டுமா? ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் திட்டமும்தான். பெட்டிக் கடை முதல் ஐ டி கம்பெனி வரை ஆன்லைன் ...! ஆன்லைன் ...! ஆன்லைன் .. ...! டிமாண்ட் அதிகமாகி விட்டதால், சில சமூக விரோத சக்திகள் மனிதர்களின் அவசரத்தையும், ஆர்வத்தையும், இச்சைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஸ்டார் ஓட்டல்களிலும் , லாட்ஜ்களிலும் காட்டேஜ்களிலும் மிளகு சைஸ் , துவரை சைஸ் காமிராக்கள் வைத்து அந்தரங்கத்தை வெளிப்படையா...