144. ஈசாக்கின் காதல் – (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை)
144. ஈசாக்கின் காதல் – (காதலர் தினச் சிறப்புச் சிறுகதை) ஜூனியர் தேஜ் விகடன் 14.02.2024 “அ ய்யா...!” “ம்...!” “காதலர் தின பிரசங்கம் கேட்டு மீடியாவுலேந்து வந்திருக்காங்கய்யா...!” “அப்படியா.. உள்ளே வரச்சொல்..” “சரிங்க அய்யா...! ” என்று சொன்னப் பணியாள், “ஹால்ல உட்காருங்க. இப்ப வந்துருவார்...! ” என்று அமரவைத்துவிட்டு, அவசரமாக வெளியேறி விட்டான். வரவேற்பறையில் அருட்தந்தை ஆல்பர்ட் பல்வேறு நிகழ்வுகளின் பங்குகொண்டபோது எடுக்கப்பட்டு, சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த நிழற்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சோஃபியா. 1517 ல் இறையியல் பேராசியராக இருந்த ஜெர்மன் பாதிரியாரும், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான, மார்டின் லூதர் கிங் அவர்கள் விட்டன்ஸ்பர்க் தேவாலயத்தில் பதிப்பித்த 95 அறிக்கைகளின் வாயிலாகச் சீர்திருத்தமடைந்த லுத்தரன் திருச்சபையின் அங்கத்தினரான பங்குத் தந்தை தேவசகாயகம். அவரின்ஒரே வாரிசான ஆல்பர்ட், தன் ஆற்றல் மிக்க இறையியல் தொண்டால், மகன் தந்தைக்காற்றும் நன்றியை நவின்று கொண்டிருக்கிறார். ’ என்பதை நினைத்தபோது பெருமையாக இருந்தது சோஃபியாவுக்கு. *** மு கத்தைத் துடைத்துக்கொண்டு வரவேற...