Posts

Showing posts from July, 2024

154 . வாக்கும் வக்கும் (மக்கள் குரல் 20.07.24)

Image
  154. வாக்கும் வக்கும்            -ஜூனியர் தேஜ் (மக்கள் குரல் 20.07.24) “நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும், நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக் கொடுக்கப்போறதா முனியன் சொன்னான்..” – மர வியாபாரி வெங்கடாசலம் பட்டும் படாமலும் கேட்டான். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு “குடுக்கறதுதான்.. தேவையை அனுசரிச்சி ஒண்ணோ, இல்ல ரெண்டையுமோ கொடுப்பேன். அந்நீல உமக்குச் சொல்றேனே..?” – என்றார் சரவணன். “நல்லது..” என்று கும்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தார் வெங்கடாசலம். சரவணன் வண்டியைப் பூட்டினார். “டடக்... டடடக்...டக்...டடக்..” சீரற்ற, குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில் பாரவண்டி சென்றது. சரவணன் பார வண்டியை வாகாய்க் களத்தில் நிறுத்தினார்.  நுகத்தடி தூக்கி மாடுகளை விடுவித்தார். “புஸ்... புஸ்... ஸென மூச்சு விட்டுத் தரையை மோப்பம் பார்த்து, ஆங்காங்கங்கே நீண்டு கிடந்த நுனிப்புல்களை நாக்கை நீட்டிச் சுழற்றி இழுத்துக் கடித்தது. வண்டியை முன் காலில் நிறுத்தினார். வண்டி மாடுகளை பிடித்து வந்து, புடைத்துக் கிளப்ப...

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)

Image
  மனிதம்   (சிறுகதை) - ஜூனியர்   தேஜ் ம ழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காதவன் மாபாணன். பார்ப்பதற்கு கட்டு-மஸ்தாக ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனது இரட்டை நாடித் தோற்றத்தைக் கண்டதும் ராணுவ அதிகாரியோ என்றுதான் எவரும் எண்ணுவார்கள். பிரசவிக்கத் தயாராக இருந்தாள் அந்த நிறைமாதக் கர்பிணி பூங்குழலி. யாருமற்ற அனாதையாய், தனி மரமாய் நின்றாள் அவள். தன் தலைப் பிரசவத்தைச் சுயமாய்ப் பார்த்துக் கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள். தமிழச்சியின் அசாத்தியத் துணிவு அவளிடம் தெற்றெனப் பளிச்சிட்டது. மத, இன, மொழிவெறியின் உச்சக் கட்டமாக, ஊட்டமும் வனப்புமிக்க கர்பிணிகளைச் சின்னாபின்னமாக்கிய கடந்தகாலக் காம-வெறியாட்டத் தலைப்புச் செய்திகளெல்லாம் மனதில் ஒன்று திரண்டு அவளை மிரள வைத்தது. மிரட்சியின் விளைவாய், வியர்வை அருவியாய்க் கொட்டியது அவளுக்கு. இதயம் பன்மடங்கு அதிகமாய் ‘லப்டப் ’ பியது. அனற்புயலாய் வீசியது சுவாசம். சிங்கத்தை மிக அருகில் கண்ட புள்ளி மானாய் மிரண்டாள். எங்கு ஓடி எப்படித் தப்பிப்பதென்று யோசித்தது மனது. அனிச்சையாக பூங்குழலியின் கைகள் இரண்டும் சேர்ந்து  கூப்பிக் கொண்டது. தொழுத...