157. அனிச்சம் (காற்று வெளி – புரட்டாசி 2024)
.jpg)
157. அனிச்சம் (சிறுகதை) ஜூனியர் தேஜ் (காற்று வெளி – புரட்டாசி 2024) த னக்கு இப்படியொரு நிலை வருமெனக் கனவிலும் நினைத்தவரில்லை குருசாமி. இரவு, சயனத்துக்குப் போகும்போது கூட திடமாகத்தானிருந்தார்; வழக்கம்போலப் படுக்கையில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கண்மூடி, கவனம் குவித்து மனம் ஒருமுகப்படுத்திக்கொண்டுதான் படுத்தார். விடிகாலை துயிலெழுந்தபோதே, தலைச்சுற்றல் தடுமாற்றம் ஏற்படுத்த, சுதாரிப்பதற்குள் தாறுமாறாய் சுவற்றில் சாய்ந்துவிட்டார்; சற்றே சுதாரித்து, சுவற்றைத் தாங்கி எழுந்து நிற்க முயன்றபோது, மீண்டும் தலைக் கிறுகிறுக்க, கைகள் துவள, வேரற்ற மரம்போல, எக்குத்தப்பாய்ச் சாய்ந்து தரையில் விழுந்து விட்டார். சாயும்போது, இரும்புக் கட்டிலின் விளிம்பில் கொசு வலையைக் கோர்க்கப் பொருத்தப் பட்ட தகரக்குழல் பின்மண்டையைத் தாக்கிவிட்டது. ரத்தக் கசிவு கண்டதும், பயந்து அடித்துக் கொண்டு, ஏற்பாடு செய்த 108ல் கொண்டுபோன குருசாமியை, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்...