159. வாரிசு ( தமிழ் நெஞ்சம் - செப்டம்பர் 2024)
159 வாரிசு (சிறுகதை) - ஜூனியர் தேஜ் தமிழ் நெஞ்சம் – (செப்டம்பர் 2024) “ இ ருவரிடமும் குறையில்லை. குழந்தை பிறக்கும். அதிகாலை வேளையில் அரச மரத்தைச் சுற்றி வந்து அந்தக் காற்றை சுவாசிக்கும் பெண்களுக்குப் பல சுரப்பிகள் தூண்டப்பட்டு, கருப்பை பிரச்னைகள் சீரடையும் , கருவுறும் வாய்ப்புகள் நிறைய இருக்கு. இது விஞ்ஞானபூர்வமா நிரூபிக்கப்பட்ட உண்மை. ” என்ற மருத்துவர் சற்றே நிறுத்தினார். “..................... ” “அதே சமயம் ஆன்மீகத்தில் நம்பிக்கையே இல்லாத உங்க மனைவியை அரசமரம் சுற்றச் சொன்னால் கேட்கவா போறாங்க? ” என்று பெருமூச்சோடு சொன்னார், பிரபல மகப்பேறு மருத்துவரும், நண்பருமான டாக்டர் சொக்கலிங்கம். *** “................. ” சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரு கனத்த மௌனம் நிலவியது அங்கே. “எனக்கு ஒரு ஐடியா தோணுது, சரிவருமா யோசிங்க ப...