161. ரௌத்ரம் பழகு (தேன் சிட்டு தீபாவளி மலர் 2024)
161. ரௌத்ரம் பழகு சிறுகதை ஜூனியர் தேஜ் (தேன் சிட்டு தீபாவளி மலர் 2024) அ ண்ணி உங்க அம்மா வந்திருக்காங்க ." சமையல்கட்டின் வாயிற்படியில் நின்று அறிவித்தாள் கௌசிகா. "சம்மந்தியம்மா.." – என்று அம்மாவைப் பணிவாக அழைத்தபடிக் கைக்கூப்பினார் அண்ணியின் அம்மா. அம்மாவின் முகம் வழக்கம்போல இறுக்கமானதைக் கவனித்தாள் கௌசிகா. சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த, இடையில் வந்து அண்ணியுடைய அம்மாவின் கையிலிருந்து, பூவும், பழங்களும் அடங்கிய நெகிழிப் பையை அம்மாவின் சார்பில் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டுபோய், சுவாமி மாடத்தின்முன் வைத்தாள். 'மாமியார் 'சுருக்' என எதாவது சொல்லி விடுவாளோ..!' என்று பயம் அப்பியிருந்தது அண்ணியின் முகத்தில் "திடீர்னு இந்த நேரத்துல உங்கம்மா எதுக்கு வந்திருக்காங்க.?"- என்று கேட்டுவிட்டால் அதற்கு ஏதும் பதில் தன்னிடம் இல்லையே..? என்ற எண்ணம் நீள, அண்ணி சமையலறை வாயிற்படியின் அருகே நின்று ஒரு கையால் நிலைப்படியைத் தாங்கிய நிலையில், லேசாகத் தலையை எட்டிப் பார்த்தாள். *** வா ங்க என்று வாய் நிறைய அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒர...