163. தோழர் (தமிழ்ப் பல்லவி 2023))
தோழர் ( சிறுகதை ) ஜூனியர்தேஜ் (தமிழ்ப் பல்லவி 2023 கவிஞர் கார்முகிலோன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை) “கௌ சிகா இல்லம் ‘பிஸி’யாக இருந்தது. “டொக்... டொக்... டொக்... டொக்......; தட்... தட்... தட்... தட்... தட்... தட்... தட்...; ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்....; ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்........” ஆணி அடிப்பது; ‘சன்-மைக்கா’ ஒட்டிய பின், அதன் மேல் கையால் தட்டிப் படிமானம் பார்ப்பது; வட்ட வடிவிலானப் பட்டைச்-சீலையை, இயந்திரத்தில் பொறுத்திப் பல்வேறு கோணங்களில் அழுத்தங்கள் கொடுத்துத் தேய்த்துத் தேய்த்து ஓரம் மழுக்குவது; வழுவழுப்பாக்குவது; மின் வாளால் அறுத்துத் துண்டிப்பது...; ட்ரில்லரால் துளை போடுவது...; இப்படிச் சத்தங்கள், தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ தொடர்ந்து மாடியிலிருந்து கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘க ண்காணிக்க ஆட்கள் இல்லை!’, என்பதால், உட்கார்ந்துக்கொண்டுக் கதை பேசுவது; வெற்றிலை, புகையிலை, மாவா என எதையாவது மென்று கொண்டும் துப்பிக்கொண்டும் பொழுது போக்குவது; செல்போன் பேசிப் பொ...