Posts

152. கேபிடல் லெட்டர். (மக்கள் குரல் 06.07.2024)

Image
152 . கேபிடல் லெட்டர். (சிறுகதை) ஜூனியர் தேஜ் மக்கள் குரல் 6.7.24 ம ருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது, பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்... ’ என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது முதல் டாக்டர் கதிரேசனுக்கு ஒரே மன அழுத்தம். எல்.கே.ஜி, யு.கே.ஜி..ல் , மிஸ்ஸோடக் கையைப் பிடித்து எழுதிப் பயிற்றுவித்த, கேப்பிடல் எழுத்துக்களை, பலமுறை எழுதி எழுதிப் பார்த்துக் கற்றுக் கொண்டது நினைவில் இருக்கிறது. மேல் வகுப்புக்கு வர வர கர்சீவ் லெட்டர் கற்றுக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், தொடர்ந்த பயிற்சியால்,  , ஒன்பதாம் வகுப்பு வரை சங்கிலியைக் இழுத்துக் கட்டியதுபோல கோர்த்துக் கோர்த்து எழுதி எழுதிப் பழக்கமாகிவிட்டது. *** கி ராமப்புறத்தில், அரசுப் பள்ளியில் படித்தால், மெடிக்கல் சீட்டுக்கு முன்னுரிமை என்று அரசாங்கம் சொன்னதால் கதிரேசனைக் கொண்டுபோய், ஒரு கிராமத்துப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே இவர் எழுதிய கர்சீவ் எழுத்தைத் தூக்கி மூஞ்சியிலேயே அடித்தார்கள். “என்னா இது, கோழி நடந்தாமாதிரி, சாதாரணமா எழுது..! ” என்ற...

151. பிற்பகல் (மக்கள் குரல் 20.06.24)

Image
 151. பிற்பகல் (சிறுகதை). வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப் போகும் மாணவர்கள் தன்னைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தைப் பெறவேண்டும், என்ற எண்ணத்தில், கையில் புத்தகம், பாடக்குறிப்பேடு போன்றவைகளைக் கொண்டு செல்வார்கள். புன்னகையோடு மாணவர்கள் முன் பேசுவார்கள்.  ஒரு சில ஆசிரியர்கள் கையில் பிரம்போடும், முகத்தில் இறுக்கத்தோடும் சென்று, முதல் பார்வையிலேயே மாணவர்களுக்கு பய உணர்வைத் தூண்டிவிடுவார்கள்.   ஆனால் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வித்தியாசமானவர். “எந்த விதத்தில் வித்தியாசமானவர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன்.  நவநீதகிருஷ்ணன் சார், ஒரு பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டுதான் வகுப்புக்குப் போவார். மேஜையில் அந்தக் குவளையை வைப்பார். புன்னகையும் இல்லாமல், இறுக்கமும் இல்லாமல் மையமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார்.  நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்களில் ஒருவரேனும் முதல் பிரிவேளை முடிவதற்குள், எழுந்து நின...

150. மறுபக்கம் (தினமணி கதிர் (16.06.24)

Image
 150. மறுபக்கம் (சிறுகதை) -ஜூனியர்தேஜ் தினமணி கதிர் (16.06.24) ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய், வித்தியாசமாய் இருக்கும் அவரிடம். Old age is not for taking rest. To Strive, To seek, To find… Not to Yield... என்ற ‘லார்ட் டென்னிசன்’ ன் தத்துவத்தைத் தன் கொள்கையாய்க் கொண்டவர். எந்தவொரு நிலையிலும், எவருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர். *** “அவுருக்கிட்ட யாரு பேசுறது...! ஊரு உலகத்துல இல்லாத அதிசமாத்தானேப் பேசுவாரு...!”  “சரியான கோணக்-கட்சி ஆசாமி...! அவருட்ட பேச நம்மாலாவாதுப்பா!” “வடக்குன்னா தெக்கும்பாரு...! கீழன்னா மேலம்பாரு...! அவுருகிட்டப் பேசி ஜெயிச்சிர முடியுமா...?” “நொரநாட்டியம் பேசுறவருகிட்டே நமக்கென்ன ஒறவுங்கறேன்...!” இப்படியெல்லாம் பரவலாக அவரைப் பற்றி, அபிப்ராயம் இருப்பதால் யாரும் அவரிடம் பேசவே யோசிப்பார்கள். *** ராஜராஜன் சார், தன் மனைவி வசுந்தரா டீச்சரைப் பள்ளி வளாகத்துக்குள்,  இறக்கிவிட்டு ‘யு டர்ன்’ போட்டுத் திரும்பினார்.  சோகமான முகத்துடன், உடைந்த குரலில், “சார...

149 சிறிய பெருந்தகைகள் (கொலுசு – ஜூன் - 2024)

Image
  149. சிறிய பெருந்தகைகள்  (பரிசு பெற்ற சிறுகதை)                  -ஜூனியர் தேஜ் (கொலுசு – ஜூன் - 2024)                                             “ஜ னனி...” “ம்...!” “வா..........ங்...கறேன்ல...!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ... வந்தேன்...!” – என்று மயூரியின் அருகில் வந்தாள் ஜனனி. அழைத்தபோது மயூரியிடம் இருந்த அவசரம் சற்றே மங்கியது, நாம் செய்வது சரிதானா?, என ஒரு கன யோசிப்பில் சுருக்கிக் கொண்ட முக ரேகைகள், சரிதான், என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் இயல்பானது. “அவசரமா அழைச்சிட்டு, என்னடீ யோசனை மயூரி..?”- ஜனனி இயல்பாகக் கேட்டாள். *** ஒ ளிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை ஜனனியின் கையில் திணித்தாள் – “இதப்பாரு…!” – என்று அவசரப்படுத்தினாள். கைப்பேசியில் இருந்த நிழற்படத்தை இயல்பாகப் நோக்கிய, ஜனனியின் பார்வைச், சடாடெனத் தீவிரமானது. ‘அம்மா, அம்மாவேதான்...!” உள்ளே ஒலித்தது. பெரு மற...

148. ப்ரொஸிஜர் (மக்கள் குரல் – 27.05.2024)

Image
  148. ப்ரொஸிஜர் (மக்கள் குரல் – 27.05.2024)                                  -ஜூனியர்தேஜ் நெ ஞ்சைப்பிடித்தபடித்   துடிதுடித்தார் பெரியவர். அப்படியொரு வலி. திருகித் திருகி வலித்தது. நெஞ்சின் மையத்தில் கட்டைவிரலையும் இடப்பக்க மார்பகப் பகுதியில் மற்ற விரல்களையும் வைத்து மசாஜ் செய்து கொண்டார். வலி நொடிக்கு நொடி உச்சத்தை நோக்கி நகர்ந்தது. குபீரென வியர்த்துக் கொட்டியது. கதர்ச் சட்டைத் தெப்பலாய் நனைந்தது. கத்துவதற்கு முயற்சித்தார். குரல் வரலில்லை. இடது கையால் மெத்தையைத் தட்டினார். காலால் டீப்பாயில் இருந்த தண்ணீர் சொம்பை எத்தித் தள்ளினார். “ட..ட..ங்.. ” என்று ஒலியெழுப்பி உருண்டது தண்ணீர் சொம்பும் அதன் மேல் மூடப் பட்டத் தட்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு சௌ...என ஒரு கத்து கத்தினார். சத்தம் கேட்டு, தன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பேத்தி, சௌமியா “தாத்தா.. ” என்று பதறிக்கொண்டே ஓடி வந்தாள். என்ன செய்வது...