Posts
சுய குறிப்பு (as on 19.04.2026)
- Get link
- X
- Other Apps
சுய குறிப்பு (as on 19.04.2026) இயற்பெயர் : வரதராஜன் அ. புனைப்பெயர் : ஜூனியர் தேஜ் ரத்த வகை : O +ve பிறந்த தேதி : 04.06.1962 குடும்பம் : மனைவி – வத்ஸலா; மகன் – ராஜேஷ்; மருமகள் – அக்ஷயா; பேத்தி – நிலா. பணி : ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர். தற்போதைய பணி :எழுத்தாளர், மனநல ஆலோசகர். கல்வி : MA (English)., M.Sc (Counselling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக் : ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல் சிறுகதை : சிற்றன்னை - குங்குமம், 24.03.1995 பரிசுகள்: 1999 கல்கி சிறுகதைப் போட்டி (பூமி இழந்திடேல்) (ஆறுதல் பரிசு) 2000 தினமணி கதிர் சிறுகதைப் போட்டி (கற்றது ஒழுகு) (ஆறுதல் பரிசு) 2002 பன்மலர் சிற்றிதழ் சிறுகதைப்போட்டி (தன்மை இழவேல்) (முதல் பரிசு) 2023 கௌரா இலக்கிய மன்றச் சிறுகதைப் போட்டி (தலைமுறைகள்) (மூன்றாம் பரிசு) 2023 மாம்பலம் சந்திரசேகர் இலக்கியபீடம்- மாத இதழ் இணைந்து நடத்திய - சிறுகதைப்போட்டி ('அம்மா வீடு') (சிறப்புப் பரிசு) 2023 நன்னங்குடி அறக்கட்டளை சிறுகதைப் போட்டி 'இளம் விஞ்ஞானி' (சிறப்புப் பர...
180. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (காற்றுவெளி - பங்குனி 2026 )
- Get link
- X
- Other Apps
180. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (சிறுகதை) ஜூனியர் தேஜ் (காற்றுவெளி - பங்குனி 2026 ) செ ன்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பலி நேரத்தில்தான் இது நடந்தது. “எது...?” ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ – அதாவது ‘கண்டதும் காதல்.’ “யாருக்கும்... யாருக்கும்...?” “ஜான்’க்கும்... க்ளாராவுக்கும்...” *** உ றவுகளும் நட்புக்களும் சாரி சாரியாய்த் திரண்டு வந்து கூடியதால், அந்த லுத்தரன் திருச்சபையில் ‘மிட் நைட் மாஸ்’ களை கட்டியது. அனைவரின் முகங்களிலும் குடி கொண்டிருந்தது பண்டிகைக்கால மகிழ்ச்சி. தொடர்ந்து கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களை ஒலிப் பெருக்கியின் மூலம் இசைத்துக் கொண்டே இருந்தது தேவாலய நிர்வாகம். இடையிடையே, “தங்கள் பெற்றோரைத் தவற விட்ட ‘ஜான்சி’ என்ற குழந்தை அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளது. உடனடியாக பெற்றோர் அலுவலகத்துக்கு வரவும்.” “ஒரு சாவிக் கொத்து கண்டெடுக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ளது, தொலைத்தவர்கள், அடையாளம் சொல்லி அதைப் பெற்றுக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று அவ்வப்போது சங்கீதத்தை நிறுத்திவிட்டு காணாமல் போனவர், போனவை பற்றிய செய்திகளையும் அறிவித்தார்கள். “விளக்கு வெளிச்சத்திற்...